அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.
எனினும் இந்த விடயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுல்..
ஒரு கலைஞன் இருப்பான்
அவனுக்கு கணிதம் தேவைப்படாது.
அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்
அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.
ஒரு இசைஞானி இருப்பான்
அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.
ஒரு விளையாட்டு வீரனிருப்பான்
அவனது உடல் நலனே முக்கியமன்றி
பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.
பரீட்சையில் அதிக புள்ளி எடுத்தால் சிறந்த பிள்ளை..
எடுக்காவிட்டால்..
தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையைப் பறித்து விடாதீர்கள்.
சொல்லுங்கள் அவர்களுக்கு
இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.
நீ வாழ்கையில் வெற்றி கொள்ளக்கூடிய இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.
உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் புள்ளியை வைத்து தீர்மானிப்பதில்லை.
என்றும் நீ என் பிள்ளை என் உயிர்.
இப்படி செய்து பாருங்கள்
பரீட்சையை வெல்லாத உங்கள் பிள்ளை
ஒரு நாள் உலகை வெல்வான்.
வெறுமனே ஒரு பரீட்சை, அதன் புள்ளி உங்கள் பிள்ளையின் கணவை, திறமகளை அழித்து விடக்கூடாது.
வைத்தியர்களும் பொருயியலாலர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.
உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.
அதிபர்.
(கொல்கத்தா பாடசாலை ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று....)
Social Plugin