கணிதப் பாடத்திற்காக நியமனம் பெறாது பாடசாலை முறைமையில் கணிதப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகத்துடன் இணைந்து "கணிதப் பாடத்தை கற்பிப்பது தொடர்பாக உயர் சான்றிதழ் பாடநெறி" அமுல் படுத்தப் படவுள்ளது.
இதில் சித்தி பெரும் ஆசிரியர்களுக்கு,
நியமனம் வேறு பாடமாக இருப்பினும் இடமாற்றத்தின் போது கணிதப் பாட ஆசிரியராக கருதப் படுவார்.
கணிதப் பாட விடைத்தாள் திருத்தும் பணிக்கு தகைமை பெறுவார்.
வலயக் கல்விப் பணிப்பாளரினால் பரிந்துரை செய்யப்பட்டு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் உறுதிப் படுத்தல் வேண்டும்.
ஆசிரியர் க.பொ.த சாதாரண தரத்தில் கணிதப் பாடத்தில் திறமை சித்தி பெற்றிருத்தல் வேண்டும், 5 வருடங்கள் கணிதப் பாடத்தை கற்பித்த அனுபவத்தை கொண்டிருத்தல் வேண்டும்.
விசேட கல்வி நியமனம் பெற்றோர் இதில் இணைய முடியாது.
(மேலதிக விபரங்களுக்கு வலயக் கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும் )
சுற்றறிக்கையை பெற
Social Plugin