வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சை - அதிபர் சேவை தரம் III



வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சை - அதிபர் சேவை தரம் III


இப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெறும்

பாடவிதானம் 

தாபன விதிக் கோவையின் ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் செயற்பாட்டு ஒழுங்கு விதிமுறைகள்
(100 புள்ளிகள் - 2 மணித்தியாலம்)

  • தாபன விதிக் கோவையின் வாசகங்களும், 
  • VII, VIII, IX, X, XI, XXIII, XXV, XXVI, XXVII, XXVIII, XXIX, XXX, XXXI, XXXII, XXXIII, XLVII,XLVII வாசகங்கள் 
  • அரச சேவை ஆணைக்குழு சபையின் செயற்சோதனை ஒழுங்கு விதிகள்

பாடசாலையின் நிதி நிருவாகம் மற்றும் நிதி ஒழுங்குக் கோவை
(100 புள்ளிகள்  2 மணித்தியாலம்)

  • வரவு செலவு திணைக்களத்தின்  நிதி நிருவாகம் மற்றும் நிதிப் பொறுப்புக்களை கையளித்தல், 
  • நிதிப் பொருப்பேற்பினை   கணக்குகளில் பதிதல்மீள் கட்டமைப்புக்குக் கொடுப்பனவு
  • அரச நிதியைப் பொருப்பெடுத்தல் 
  • கட்டுநிதி மற்றும் வங்கிக்கடன் பணிகள் மற்றும் சேவைகள்
  • பொருள் ஆய்வு
  • கணக்காய்வு
  • அரச அலுவகங்களில் பயன்படுத்தப்படும் நாளேடு
  • வருமான மற்றும் செலவினச் சுருக்கம்
  • வங்கி  இணக்கக் கூற்று
  • செலுத்தப் படாத கொடுப்பனவு
  • கடமைத் தொலைபேசி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை 
  • நிதி ஒழுங்குக் கோவைகள்


பரீட்சார்த்திகள் ஒவ்வொரு பாடத்திலும் ஆகக் குறைந்தது 40 புள்ளிகள் பெறல்  வேண்டும்

விண்ணப்பப் படிவத்தை கோட்டக்  கல்விப் பணிப்பாளர் / வலயக் கல்விப் பணிப்பாளர்அ ல்லது மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்/ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அல்லது சேவைப் பொறுப்பாளரினால்  பதிவுத் தபாலில்  அனுப்ப வேண்டும் 
அனுப்ப வேண்டிய முகவரி 
Commissioner General of Examinations
Organizations and foreign examinations branch
department of examination
srilanka
post box 1503
colombo

முடிவுத்திகதி 

12. September. 2017

பரீட்சைக் கட்டணம்

  • முழுக்கட்டணம்  500
  • ஒரு பாடத்திற்கு  250
பரீட்சைக் கட்டணம் பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் வருமானத் தலைப்பிற்கு 2003-02-13 ல் வைப்பில் இடக் கூடியவாறு நாட்டில் அமைந்துள்ள எந்தவொரு தபால் அல்லது உப தபால் அலுவலகத்திலும்  செலுத்தி பெற்றுக் கொள்ளப்பட்ட  பற்றுச் சீட்டினை  விண்ணப்பப் படிவத்தில் உரிய இடத்தில கலராது ஒட்டி அனுப்ப வேண்டும்.
 மேலதிக தகவல்கள்

  11.08.2017 திகதிய வர்த்தமானியில்