2018 ஆம் கல்வி ஆண்டில் நடைபெறும் ஒரு வருட கால பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறி (உள்வாரி ) முழு நேர பாடநெறியை தொடர்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பாடநெறி நடைபெறும் இடங்கள்
- கொழும்பு பல்கலைக்கழகம் - சிங்கள மற்றும் தமிழ் மொழி
- பேராதனை பல்கலைக்கழகம் - சிங்கள மொழி மூலம்
- யாழ் பல்கலைக்கழகம் - தமிழ் மொழி மூலம்
தகைமைகள்
- பட்டதாரியாக இருத்தல்
- பிரிவென் ஆசிரியர் சேவை அல்லது தனியார் பாடசாலை ஆசிரியர் சேவை அல்லது இலங்கை ஆசிரியர் சேவை அல்லது அதிபர் சேவை அல்லது ஆசிரியர் கல்வியியலாளர் சேவை அல்லது கல்வி நிர்வாக சேவை யில் நிரந்தர நியமனம்
- பட்டதாரியாக ஒரு வருட சேவை காலம்
- கற்பித்தலில் தேசிய டிப்ளோமா நியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஐந்து வருட சேவை காலத்தை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
(கல்விமானி பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாது)
எழுத்துப் பரீட்சை மூலம் தெரிவுகள் இடம்பெறும்.
எழுத்துப் பரிட்சை கொழும்பு, யாழ்ப்பாணம் நகரங்களில் நடைபெறும்.
முடிவு திகதி 2017.09.22
மேலதிக விபரங்களுக்கு
01.09.2017 வர்த்தமானிஇனை பார்க்கவும்.
Social Plugin