நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளில் 10 வருடமும், அதற்கு மேலும் கடமையாற்றும் இடைநிலை வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் அணைத்து ஆசிரியர்களுக்கும் மார்ச் 31 இற்கு முன்னர் இடமாற்றம் கிடைக்கபெறும்.
கல்வி அமைச்சினால் தேசிய பாடசாலைகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 5473 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். இவர்களுக்கான கடிதம் இவ்வாரம் அனுப்பி வைக்கப்படும்.
2017 ஜூன் மாதம் 30 ஆம் திகதியன்று தேசிய பாடசாலை ஒன்றில் தொடர்ச்சியாக 10 வருடமும் அதற்கு மேலும் கடமையாற்றிய ஆசிரியர்களும், நேரசூசி இன்றி தேசிய பாடசாலைகளில் கடமையாற்றுவோரும் மாவட்டதிற்குள் இடமாற்றம் செய்யப் படுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- தினகரன். 22.03.2018
0 கருத்துகள்