ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான அறிவுறுத்தல்களை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்
- பரீட்சை நேரம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டும்
- பத்திரம் I மு.ப 9.30 தொடக்கம் மு.ப. 10.15 வரை (45 நிமிடங்கள் )
- பத்திரம் II மு.ப 10.45 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை (1 மணி 15 நிமிடங்கள் )
- மு.ப 9.00 மணிக்கு மாணவர்கள் தம் கதிரையில் அமர வேண்டும் என்பதால் குறித்த நேரத்திற்கு சமூகம் தந்திருத்தல்
- மாணவர்கள் தமது சுட்டெண்ணை உடையின் இடது பக்கத்தில் அணிந்து இருத்தல்
- விடையளிக்க பென்சில், நீல நிற பேனா அல்லது கருப்பு நிற பேனா பயன்படுத்தலாம்.
- பரீட்சை தாளில் சரியாக சுட்டெண்ணை எழுதுதல். (முதலாம் மூன்றாம் பக்கங்களில் இடம் ஒதுக்கப் பட்டிருக்கும் )
- தரப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி விடையளிக்கவும்.
- செய்கை தாள் வழங்கப்படும்
- பரீட்சை தாளினை கையில் எடுத்தும் பதறாமல் ஒழுங்காக வாசித்து விடையளிக்கவும்.
பெற்றோருக்கான அறிவுறுத்தல்கள்
- நேர காலத்துடன் மாணவர்களை பரீட்சை நிலையத்துக்கு அழைத்து வரல் வேண்டும்,
- பரீட்சை நிலையத்தினுள் உள் நுழைய கூடாது
- இடைவேளையின் போது பரீட்சை நிலையத்தினுள் உள் நுழைய அனுமதி வழங்கப் பட மாட்டாது
- பிள்ளைக்கு சிற்றுண்டி மற்றும் தண்ணீர் போத்தல் கொடுத்து அனுப்பவும்
0 கருத்துகள்