தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் முறைமைக்கு உட்படும் ஆசிரியர்களின் நிகழ்நிலை மனித வள முகாமைத்துவ முறைமை.
கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையினுள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தரவுகள் இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் ஆசிரியர்களின் தரவுத்தளமானது முழுமையாகப் பதிவேற்றப்பட்டுள்ளது. வலய கல்வி அலுவலர்களினால் பதிவேற்றப்பட்டுள்ள இம்முறைமையில் ஆசிரியர்களுக்கும் பொறுப்புக்கள்,கடமைகள் உள்ளன.
ஆசிரியரின் கடமைகளாவன
மாதத்திற்கு ஒருமுறையாவது இந்த தகவல் முறைமையினுள் நுழைந்து தனது தரவுகளை சரிபார்த்துக் கொள்ளல் வேண்டும். இற்றைப்படுத்தப்படவேண்டிய தகவல்கள் இருப்பின் குறித்த ஆசிரியர்கள் அவற்றை இற்றைப்படுத்தி விட்டு அவற்றுக்கு தேவையான ஆவணங்களை கோப்புகளுக்கு பொறுப்பான அலுவலரிடம் கையளித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் கோவைக்குப் பொறுப்பான அலுவலரினால் குறித்த இற்றைப்டுத்தல் வேண்டுகோள் உறுதிப்படுத்தப்படும்.
இந்த முறைமையில் நுழைய பயனர் சொல்,மற்றும் கடவுச் சொல் என்பன தேவை. இவற்றை ஒவ்வொரு வலயத்திற்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள் இணைப்பாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இணைப்பாளரகளின் பெயர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
இது தொடர்பான பூரண தகவல்களை பின்வரும் இணைப்பில் உள்ள சுற்றரிக்கை மூலம் தெளிவாகவும், விவரமாகவும் அறிந்து கொள்ளலாம்.
மேற்படி தகவல் முறைமையினுள் நுழைய பின்வரும் இணைப்பை அழுத்தவும்
0 கருத்துகள்