விழிப்புணர்வு பதி்வு ; பெண்களே உசாராக இருங்கள்


பிரபல்யம் அடைந்து வரும் #ஆண்டி #கோர்ஸ்
குறி வைக்கப்படும் திருமணம் ஆன 24-35 வயதுக்குற்பட்ட இளம் பெண்கள்.
(சில வார்த்தைகள் அசிங்கமாக பிரயோகிக்க பட்டு இருந்தாலும்  சொல்ல வேண்டியதை சொல்கிறோம்)

உங்களுக்கு 10 வயதில் பிள்ளை இருக்கட்டும், ஏன் இரண்டு பிள்ளைக்கு தாயாக தான் நீங்கள் இருந்து விட்டு போங்கள், என்னை எவன் பார்ப்பான் என்ற எண்ணத்தில் மாத்திரம் கவனக் குறைவாக இருந்து விடாதீர்கள்.

காரணம் இனையம், ஆபசப் படம், கதைகள், மீம்ஸ்கள் என பல வடிவில் உங்கள் வயதில் இருக்கும் பெண்களை வைத்து புது காமக் காவியமே உருவாக்கி வைத்துள்ளார்கள்.

கணவன் வெளிநாட்டில் அல்லது தொழிலுக்கு சென்றுவிடுதல், உதவிக்கு யாரும் இல்லாத காரணம் என பல தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணம் முடித்த பல இளம் பெண்கள்,

பிள்ளைகளை நேர்சரி ,பாடசாலை விடுதல் ,பிரத்தியோக வகுப்புகளுக்கு அழைத்து செல்தல், வீட்டு பொருட்களை வாங்குதல் என வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

£தொடர்ச்சியாக ஒரே முச்சக்கர வண்டிகளில் நம்பிக்கை, மாதாந்த கட்டண அடிப்படை என்பதற்காய் பயணம் செய்தல்,

£ வயதில் சிறியவர் தானே என பழக்கத்தில் வரும் வாலிபர்கள்,

£ தொடர்ச்சியாக ஒரே கடையில் பொருட்களை வாங்குதல்

£ வகுப்பில் உள்ள ஆசிரியர்கள்,

£ சில சமயம் குடும்பத்திற்குள் உள்ளவர்காலால் என பலராலும் உங்களுக்கு வலை விரிக்கப்படுக்கிறது என்பதை மறக்க வேண்டாம்,

இவர்களிடம் உண்மை மரியாதையுடன் நீங்கள் பழகினாலும். இவர்களில் சிலர் ஆண்டி கோர்ஸ் என ஒரு பெயரை வைத்து உங்களை குறி வைத்து கொத்தி விட காத்து நிற்கின்றனர் என்பதே உண்மை.

தேவைக்கு அதிகமாய் தாத்தா(Sister) பாசம் ,சொல்லுங்க தங்கச்சி என தங்கச்சி பாசத்துடன் இவர்கள்,

"சொல்லுங்க தாத்தா சொல்லுங்க தங்கச்சி" என்று பாசம் பொங்க கதை கொடுத்து உங்கள் குடும்ப நிலவரம் இதர விடயங்களை மெது மெதுவாக அலசி ஆராய்ந்து உம்மை பற்றிய செய்திகளை ஒரு விதமான முஹப்பத்துடன் சேகரித்துக் கொள்வதுடன்,

உங்கள் சிறு பிள்ளைகளுடன் அதி கூடிய பாசத்தினையும் அநியாயத்திற்கு பொலிந்து அந்த பிள்ளையிடமும் நல்ல பெயரை பெற்றுக் கொள்வார்கள்.

உம் வீடுகளுக்கு வேண்டும் என்றே சந்தர்ப்பம் அமைத்து வருவது ,வலிய வந்து உதவுவது வீட்டு சாமான்களை வீட்டு குசினி வரை கொண்டு வந்து தந்து விட்டு ஒரு கிளாஸ் ட்ரின்ஸ் தாங்க என கேட்டு அந்த கேப் இல் கதை கொடுப்பது, வீட்டுக்குள் திருட்டுத் தனமாக உங்கள் அசைவுகளை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளல்,

தெரியாத் தனமாக வந்ததை போல் அர்த்த ராத்திரியில், அல்லது பகலில் கோல் செய்தல்,தெரியாமல் வந்து விட்டது என்றுன்கூறிக் கொண்டே மெதுவாக கதை கொடுத்து நாடி பிடித்து பார்க்க முயல்வது,

ஆபாச/ சாதரன மெசெஜ்கலை இன்னும் ஒருவருக்கு அனுவதை போல் உங்களுக்கு அனுப்பி விட்டு சொரி சொல்லியும் கதை அளந்தும் ஆழம் பார்ப்பது

என கொஞ்சம் கொஞ்சமாக உங்களை நெருங்கி வந்து,உங்களுக்கு வலை விரித்து விடுவார்கள்,#வலையில்_சிக்கிக்கொண்டல்

உங்களைப் பற்றி அவன் நண்பர்களிடம் சொல்லி அவர்களுக்கும் உங்களை மிரட்டி சரி விருந்து கொடுத்து விடுவது என பட்டியல் நீள்கிறது.

இவர்களுக்கு முதலில் மரியாதை நிமித்தம் இடம் கொடுத்து விட்டு இவர்கள் ஏன் நெருங்குகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து இவர்களை புறக்கணித்ததால்,

முதலில் உங்களைப் பற்றி அறிந்து வைத்திருந்த விடயங்களை, புகைப்படங்களை வைத்து உங்கள் வீட்டுக்குள் உங்களுடன் இருந்து உள்ளதாய் கதைகளைக் கூட சிலர் பரப்பி உள்ளனர்

தவிர்க்க முடியாத காரனகளுகாய் வெளியில் செல்லும் பெண்களே 
இது போன்றவர்களை உங்களால் நேரடியாக அடையாளம் காண முடியாது போகலாம் ,

எனவே இவர்களிடம் இருந்து தப்பிக்க உள்ள ஒரே வழி

இவர்களிடம் அதிகம் கதை கொடுக்காமல் உங்கள் வேலையை மாத்திரம் நிறைவு செய்து விட்டு வாருங்கள்.

எக்காரணம் கொண்டும் உம் போன் நம்பரை கொடுத்தல்,பிழையான மெசேஜ், தெரியாமல் வரும் கோல் களை கணக்கில் கூட எடுக்காமல் விட்டு விடுங்கள்

தேவைப்படும் போது குடும்பத்தின் உள்ள ஆண்கள் இலக்கத்தை கொடுத்து வையுங்கள்

இவர்கள் தொடர்பை வீட்டு வாசல் வரை கூட கொண்டு வர வேண்டம்.

உங்கள் பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் இடையில் கூட ஒரு இடைவெளியை வளர்த்து வையுங்கள்.

இது போல் உங்களை மரியாதை உள்ள பெண் ஆகவும்,

ஒழுக்கம் உள்ள பெண் ஆகவும் , கனிந்து வழியும் மாங்கனி போல் இல்லாமல் கண்ட கண்டவர்களுடன் சிறிது கடுமையாக நடந்து கொள்ளும் மானம் உள்ள பெண்ணாகவும் செயல் பட்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்