புத்தக கண்காட்சிகள்
வாசிப்பு மனிதனை பூரணமாக்கும் என்ற ஒரு பழமொழி இருக்கின்றது. அதாவது வாசிப்பதினூடாக மனிதனின் பெறுமதி அதிகரித்துச் செல்கின்றது. புதிய பல விடயங்களை அவன் கற்றுக் கொள்கின்றான். இவ்வாறு வாசிக்கும் விடயங்கள் அவனது உள்ளத்தில் பதிந்து, அவனது பேச்சில், செயலில் அவை வெளிக்காட்டப்படும் போது, அவன் சமூகத்தில் உயர்வானவனாக மதிக்கப்படுகின்றான்.
இன்று அருகிப்போய் உள்ள ஒரு விடயம் தான் இந்த வாசிப்புப் பழக்கம். முக்கியமாக இன்றைய இளம் சந்ததியினரிடம் அரிதாகக் காணப்படக்கூடிய ஒரு விடயமாக இது இருக்கின்றது.
பாடசாலைகளில் இன்றும் பரீட்சை மையக் கல்வி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வாசிப்பின் தேவை மாணவர்களுக்கு முக்கியமான ஒரு விடயமாகும்.
இன்றைய காலகட்டத்தில் புத்தக விற்பனை நிலையங்களிற்கு சென்று, புத்தகங்களை தெரிவு செய்தல் என்பது இலகுவான காரியம் அன்று. எனினும் இந்த நோக்கத்தை இலகுவாக்க புத்தக கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.
பரந்த அளவிலான, பல்வேறு தெரிவுகளைக் கொண்ட புத்தகங்களை, ஒரே இடத்தில் பார்த்து, தெரிவு செய்து, அவற்றை விசேட விலைக் கழிவுடன் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இங்கே கிடைக்கின்றது.
எனவே ஆசிரியர்கள். தாம் இவற்றில் கலந்து அதிலிருந்து பயன் பெறுவதோடு. முக்கியமாக மாணவர்களையும் இதன்பால் வழிகாட்டல் வேண்டும். குறிப்பாக சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்களை அழைத்துச் செல்வது பொருத்தமானது. அதே போன்று, இவ்வாறு மாணவர்களால், ஆசிரியர்களால் தெரிவு செய்யப்படும் புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலை வாசிகசாலையில் வைக்கப்படும் போது மாணவர்களின் சுய கற்றலுக்கு அவை பெரும் உறுதுணையாக இருக்கும்.
இவ்வருடம் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிகள் தொடர்பான தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து எமது பாடசாலை சமூகம் உச்சப்பயனை பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பது சிறப்பான விடயமாகும்.
September 20-29 BMICH
Social Plugin