நவம்பர் 23 தொடக்கம் பாடசாலைகள் நடைபெறும் விதம்
மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் நவம்பர் 23 ஆரம்பிப்பதுடன், பாடசாலைகள் எவ்வாறு நடைபெறல் வேண்டும் என்ற 8 அம்சங்கள் அடங்கிய விசேட கடிதம் ஒன்றினை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.
1. சுகாதார துயைினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நவம்பர் 23 முதல் பாடசாலைகள் பின்வருமாறு ஆரம்பிக்கப்படும்.
guruwaraya.lk
2. மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பொலிஸ் பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களுக்கு கற்றல் செயற்பாடுகள் மாத்திரம் நவம்பர் 23 தொடக்கம் ஆரம்பிக்கப்படல் வேண்டும். ஆரம்பப் பிரிவுகள் ஆரம்பிப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.
guruwaraya.lk
3. பாடசாலை மட்டத்தில் தீர்மானங்கள் எடுத்தல்
அதிபரின் தலைமையில் , பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை சுகாதார அபிவிருத்தி குழு இணந்து , கீழ் குறிப்பிடப்படும் அதிகாரிகளுடன் இணைந்து உருவாக்கப்படும் பிரதான குழுவானது , பாடசாலை ஆரம்பித்து, பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏதும் பிரச்சினைகள் எழுந்தால் வலய மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
- பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி
- பொது சுகாதார பரிசோதகர்
- கிராம அலுவலர்
- பொலிஸ்
- பிரதேச போக்குவரத்து அதிகாரியின் பிரதிநிதி
guruwaraya.lk
4. இதற்கு முன்னர் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு என்பன கொவிட் பாதுகாப்பு தொடர்பாக வௌியிட்ட அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படல் வேண்டும்.
guruwaraya.lk
5. கல்வி சார் ஊழியர்கள், கல்வி சாரா ஊழியர்களை பாடசாலைக்கு அழைப்பதில் அதிபர்கள் தேவைக்கு ஏற்ப மேற்கொள்ளலாம். மேல் மாகாணம் அதற்கு வௌியே, தனிமைப்படுத்தல் பிரதேசம் அதற்கு வௌியே கல்வி சார் ஊழியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் உட்செல்வது, வௌியேறுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
guruwaraya.lk
6. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் பாடசாலைகளின் வகுப்புகள் பின்வருமாறு தனி நபர் இடைவௌி பேணி ஆரம்பிக்கப்படல் வேண்டும். இங்கு க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும்
வகுப்பில் மாணவர் எண்ணிக்ைக
- 15 க்கு குறைவான மாணவர்கள் - அனைத்து நாட்களும், அனைத்து வகுப்புகளும் நடைபெறும்
- 16 - 30 தொகை மாணவர்கள் - இரண்டு குழுக்களாக பிரித்து, ஒரு வாரம் விட்டு, ஒரு வாரம் மாறி மாறி வகுப்புகளை நடாத்துதல் ()
- 30 க்கு மேற்பட்ட மாணவர்கள் - 15 மாணவர்கள் அடங்கிய குழுக்களாக பிரித்து , சமனான நாட்கள் நடைபெறுமாறு (பொருத்தமான விதத்தில்)
guruwaraya.lk
7. அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் சந்தர்ப்பங்கள் கிடைக்குமாறு திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு , வலய கல்வி அலுவலகத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ளல் வேண்டும். இதன்போதான தேவையான மேலதிக வசதிகள் தொடர்பாக தகவல்கள் அடங்கிய அறிக்கையை மாகாண கல்விப் பணிப்பாளரினூடாக கல்வி அமைச்சுக்கு வழங்கல் வேண்டும்.
guruwaraya.lk
8.போக்குவரத்து தொடர்பாக பிரதேச போக்குவரத்து முகாமையாளரினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். guruwaraya.lk
(சிங்கள ஆவண மொழிபெயர்ப்பு)
0 கருத்துகள்