நேற்று ஆரம்பமாகிய பாடசாலைகளின் மாணவர். ஆசிரியர் வரவு சம்பந்தமாக கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
3 ஆம் தவணைக்காக நாட்டில் உள்ள 5100 அளவிலான பாடசாலைகள் தரம் 6-13 வகுப்புகளுக்காக நேற்று 23 ஆம் திகதி திறக்கப்பட்டது. ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு மாணவர், ஆசிரியர் வருகை இருந்ததாக கூறும் கல்வி அமைச்சு அது தொடர்பான மாகாண ரீதியிலான தரவுகளை வௌியிட்டுள்ளது. தென் மாகாணத்தில் குறைவான அளவிலும், வட மாகாணத்தில் அதி கூடிய அளவிலும் மாணவர்களின் வருகை காணப்பட்டதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.
மேலும் பாடசாலையை தொடர்ந்து நடாத்துவது தொடர்பாக பெற்றோர் உட்பட பாடசாலை சமூகம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அச்செய்தி குறிப்பிடுகின்றது.
0 கருத்துகள்