2021 ஆம் ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான சுற்றறிக்கை

2021 ஆம் ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

Download PDF

முக்கியமாக நிகழ்த்த வேண்டிய விடயங்கள்

  • அனைத்து ஊழியர்களினதும் முன்னிலையில் நிறுவன அல்லது அலுவலகத் தலைவர் தேசிய கொடியை ஏற்றுதல். (அனைத்து ஊழியர்களையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ப்பதற்கு தடையாக அமையும் இடவாதிப் பிரச்சினைகள் இருப்பின் அனைத்து ஊழியர்களினதும் பங்கேற்பை உறுதிப்படுத்தும் விதத்தில் பொருத்தமான மாற்று வேலைத் திட்டமொன்றை பயன்படுத்த முடியும்.
  • தேசிய கொடியை ஏற்றிய பின்னர் தேசிய கீதம் இசைத்தல்.
  • இராணுவ வீரர்கள் உள்ளிட்ட தேசத்திற்காக மாத தியாகம் செய்த அனைவரையும் நினைவு உள்வதற்காக 02 நிமிடங்கள் அமைதி பேணுதல்.
  • அனைத்து ஊழியர்களும் தமக்கு வசதியான ஒரு மொழியில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரச சேவை உறுதிமொழியை சத்தியப் பிரமாணத்தை வாசித்தல் 
  • தற்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரதான சுகாதாரப் பிரச்சினையான கொவிட்-49 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ஒவ்வொருவருக்கும். சமூகத்திற்கும் உள்ள பொறுப்புக்களை வலியுறுத்தும் உரையொன்றை சுகாதாரத் துறைசார் உத்தியோகத்தர் ஒருவரின் பங்களிப்புடன் நடாத்துதல்
  • சுபீட்சமான இலங்கையினுள் பயனுள்ள பிரசைகளை, மகிழ்ச்சியான குடும்பங்களை, பண்பாடான, ஒழுக்கமுள்ள நீதியான சமுதாயத்தை உருவாக்குவதற்காக ஊழியர்கள் ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை நேர்மையாக, தாமதமின்றி, கடும் அர்ப்பணிப்புடன் வழங்குவதன் தேவையைத் தொனிப் பொருளாகக் கொண்ட உரையொன்றை நிறுவனத் தலைவர் நிகழ்த்துதல்,




 

கருத்துரையிடுக

0 கருத்துகள்