மத்திய மாகாண கல்வி அமைச்சின் புதிய நடவடிக்கை தொடர்பாக இன்றைய தேசிய நாளிதழ்களில் விசேட செய்தி ஒன்றினை வௌியிட்டுள்ளன.
மத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் தமது வாழிடத்திற்கு 2 கிலோ மீற்றர் அண்மையில் உள்ள பாடசாலைக்கு சென்று தமது கற்றல் - கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக என அச்செய்தி குறிப்பிடுகின்று.
இத்திட்டமானது யடினுவர மெனிக்திவெல மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திலக் ஏக்கநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடராக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், மாணவர் - ஆசிரியர் நேரடி இடைத் தொடர்புகளினூடான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவிட் நிலைமைகளின் கீழ் தமது பாடசாலைகளுக்கு செல்ல முடியாத ஆசிரியர்களுக்கு இவ்வேற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மாணவர்கள் தமது பாடசாலைக்குரிய சீறுடைகளை அணிந்து கொண்டு அருகில் உள்ள பாடசாலைகளுக்கு செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பபட்டுள்ளது.
தரம் 6 தொடக்கம் 13 வரையான் மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்படும் மேற்படி திட்டம் , பின்னர் ஏனைய ஆரம்ப பிரிவு வகுப்புகளுக்கும் பிரயோகிக்கப்படும்.
கோவிட் நிலைமைகள் எதிர்வரும் 2 வருடங்களுக்கு தொடரலாம் என்ற நிலைமைகளின் கீழ், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தாது, தொடராக கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
0 கருத்துகள்