2021 ஆம் ஆண்டு தரம் 1 வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு மாகாண, வலய கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு 16.01.2021 ஆம் திகதியிடப்பட்ட விசேட கடிதம் (ED/1/9/2/11/2-2021) ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. guruwaraya.lk
அரச மற்றும் அரச உதவி பெறும், அரச உதவி பெறாத தனியார் பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 1 வகுப்புகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 15 பெப்ரவரி 2021 அன்று மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
guruwaraya.lk
இந்நடவடிக்கைகளின் போது, கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட ED/01/21/07/03/2020 - III, 2021.01.04 வௌியிடப்பட்ட கோவிட் நிலைமைகளின் கீழ் பாதுகாப்பான முறையில் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான கடிதம், ED/01/09/06/01/05-2020(I) மற்றும் 2021 ஆம் ஆண்டு பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பான கடிங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை அதிபர்கள் பின்பற்றல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. guruwaraya.lk
மற்றும் 2020.05.11 வௌியிடப்பட்ட 15/2020 சுற்றறிக்கை (கோவிட் பரவலை தவிர்க்க பாடசாலைகளை ஏற்பாடு செய்தல்) மற்றும் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றல் வேண்டும்.guruwaraya.lk
இதற்கு முன்னைய வருடங்களைப் போன்று, மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, கூட்டங்கள் என்பன தவிர்க்கப்படல் வேண்டும். 2021.02.15 இற்கு பின்னர் மாணவர்களை அடையாளம் காணும் செயற்பாடுகளை சுகாதார வழிகாட்டல்களை பேணி செய்யப்பட வேண்டியதுடன், அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் ஒன்று சேர்க்கும் செயற்பாடுகள் தவிர்க்கப்படல் வேண்டும். guruwaraya.lk
சிங்கள மூல ஆவணத்தின் மொழிபெயர்ப்பு
0 கருத்துகள்