நான் ஆசிரியராகக் காரணம் நீங்கள் தான் சேர் (சுவாரஸ்யமான ஒரு கதை)

சேர்.... சேர்...

உங்களுக்கு என்ன ஞாபகமிருக்குதா?

இல்லை. எனக்கு ஞாபகம் இல்லை. நீங்க யாரு?

நான் உங்கட மாணவன் சேர்.

ஓ அப்படியா..மிச்சம் நல்லம். இப்ப நீங்க என்ன செய்றீங்க.

நான் இப்ப ஒரு ஆசிரியர்.

ஓ..மிச்சம் நல்லம். அப்ப என்ன போல ஒரு ஆசிரியர் நீங்க..

உண்மைக்கும் சொல்ல போனால், நான் ஓர் ஆசிரியரானது உங்கள ஒரு வழிகாட்டியா கொண்டு சேர்.

உண்மைக்குமா? அது எப்படி?

ஒரு நாள் எங்கட வகுப்புக்கு ஒரு பிள்ளை அழகான கைக்கடிகாரம் ஒன்று எடுத்து வர, அதுட அழக கண்டு நான் அத திருடிட்டேன்.

அந்த பையன் உங்கள்ட தன்னட கைக்கடிகாரம் காணல்லன்னு முறைப்பாடு செய்ய,

நீங்க இப்பிடி சொன்னிங்க

"வகுப்புல ஒரு மாணவன்ட கைக்கடிகாரம் காணமல் போய்ட்டுது. அப்பிடியே எல்லாரும் எழும்பி, கொஞ்சம் முன்னுக்கு வந்து, கண்களை மூடிக்கொண்டு கொள்ளுங்கன்னு சொன்னிங்க.

நானும் கண்களை மூடிக்கொண்டு நின்னு கொண்டிருந்தேன்.நீங்களும் ஒவ்வொருவரா பரீட்சித்துட்டு வந்தீங்க
அப்பிடியே என் பொக்கட்ல கைய போட்டு, அமைதியா அந்த கைக்கடிகாரத்த எடுத்துட்டு அப்பிடியே தொடர்ந்து அடுத்த பிள்ளைகளையும் பரீட்சித்திட்டு, எல்லாரையும் பரீட்சித்த பின்னர், ஹா..கைக்கடிகாரம் கெடச்சிரிச்சி. எல்லாரும் போய் உக்காருங்கன்னு சொன்னிங்க.

அன்று தான் நான் திடசங்கற்பம் பூண்டேன். உங்கள போல நானும் ஒரு ஆசிரியராக வர வேணும் னு சொல்லி,

மிச்சம் நல்லம் மகன். அந்த சம்பவம் எனக்கு நல்லா நெனவு இருக்கு.அந்த கைக்கடிகாரத்தையும் நெனவு இருக்கு. ஆனாலும் எனக்கு உன்ன நெனவு இல்ல மகன்.

ஏன்னு சொன்னா நானும் அன்று கண்கள மூடிக் கொண்டு தான் இருந்தேன்
-முகநூல் சிங்கள ஆக்கத்தின் மொழிபெயர்ப்பு-

கருத்துரையிடுக

0 கருத்துகள்