பாடசாலை ஆரம்பிக்கும் தினங்கள் மற்றும் வகுப்புகள்

 


பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிக்கின்றது.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர்ந்த , மேல் மாகாணத்தின் பாடசாலைகள் தரம் 11 மாத்திரம் ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

ஏனைய அனைத்து பாடசாலைகளும் தரம் 2 தொடக்கம் 13 வரை எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.


மேல் மாகாண மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளினதும் தரம் 2 தொடக்கம் 13 வரை ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். 

மேல் மாகாணத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேச பாடசாலைகளில் தரம் 11 மாத்திரம் ஜனவரி 25 ஆம் திகதி பாடசாலை நடைபெறும்.

மூலம் : கல்வி அமைச்சு

 ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 6,7,8,9 மற்றும் 10 ஆம் திகதிகளில் பாடசாலை சுகாதார அபிவிருத்திக்குழு மற்றும் பெற்றோரின் உதவியுடன், அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நடைபெறும் செயற்பாடுகளை வலய மற்றும் மாகாண கல்வி அலுவலகங்கள் மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

 இது தொடர்பான விளக்கங்களை பின்வரும் வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் பின்வரும் இணைப்பில் உண்டு.

பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான வழிகாட்டல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்