2021 ஆம் ஆண்டு கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சானது அதிபர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 3 வருட பாடநெறியை தொடர்ந்து, கற்பித்தல் தொடர்பான தேசிய டிப்ளோமா பட்டம் பெற்றவர்களின் 2016 -2018 கற்கை நெறி குழுவின் ஆசிரிய நியமனம் 2021.01.18 ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3 - I (ஆ) இற்கான நியமனம் வழங்கப்பட்டது.
அதற்கேற்ப உமது பாடசாலைக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பான விபரங்களும், அவர்களது நியமனக் கடிதத்தின் பிரதியும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
எனவே பின்வரும் இணைப்பில் உள்ள ஆவணத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூரணப்படுத்தி எதிர்வரும் 25.02.2021 ஆம் திகதிக்கு முன்னர் ncoe.dpl@gmail.com எனும் ஈ மெயில் முகவரிக்கு அல்லது 011 - 2 784 819 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கப்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
படிவத்தினை தறவிறக்கம் செய்ய பின்வரும் இணைப் பை அழுத்தவும்.
அதிபர், கல்வி அமைச்சு
0 கருத்துகள்