எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களமானது விசேட ஊடக அறிக்கை ஒன்றினை வௌியிட்டுள்ளது. சிங்கள மொழி மூல ஆவணத்தின் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.
ஊடக அறிவித்தல்
க. பொ.த. சாதாரண தர பரீட்சை - 2020 (2021 மார்ச்)
நடைபெறும் தினம் 2021.03.01 - 2021.03.10
guruwaraya.lk
பாடசாலை விண்ணப்பதாரர்கள் 423 746
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் - 198 606
மொத்த விண்ணப்பதாரர்கள் 622 352
guruwaraya.lk
பரீட்சை நிலையங்கள் 4 513
இணைப்பு மத்திய நிலையங்கள் 542
அறிவுறுத்தல்கள்
நாளாந்த பரீட்சை கால அட்டவணை தொடர்பாக அவதானத்து்டன் இருத்தல் வேண்டும். கொவிட் 19 நிலைமைகளின் காரணமாக பரீட்சை நிலையத்தில் சுகாதார பாதுகாப்பு நடவடிக் கைகள் செயற்படுத்தப்படுவதால் பரீட்சை ஆரம்பிக்க ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு அனைத்து பரீட்சார்த்திகளும் சமூகமளிக்க வேண்டும்.
guruwaraya.lk
பரீட்சையின் போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பரீட்சை அனுமதி அட்டையுடன், தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் வௌிநாட்டு கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் முன்வைக்கப்படல் வேண்டும்.
மேற்படி ஆவணங்கள் இல்லாத பாடசாலை பரீட்சார்த்திகளுக்காக ஆட்களை பதிவு செய்யும் ஆணையாளரினால் , புகைப்படத்துடன் கூடிய தனிப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டு வௌியிடப்பட்ட கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும்.
guruwaraya.lk
பரீட்சை நிலையத்திற்கு வருகை தர முன்னர் நேர காலத்துடன் அனுமதி அட்டையை நன்றாக சரிபார்த்துக் கொள்வதுடன் , விண்ணப்பித்த பாடங்கள், பாட இலக்கங்கள், மொழி மூலம் , கையொப்பத்தை உறுதிப்படுத்திக் கொள்ளல் மற்றும் பரீட்சை நிலையம் போன்ற விடயங்களை நல்ல முறையில் சரிபார்த்துக் கொள்ளவும்.
அனுமதி அட்டைகளில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பின், நிகழ்நிலையில் மாற்றங்கள் மேற் கொள்ளலாம். ஒரு முறை மாத்திரமே மாற்றத்தினை மேற்கொள்ளலாம். guruwaraya.lk
டெங்கு பரவலை தடுப்பதற்கான ஏற்பாடுகள் பரீட்சை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவிட் நிலைமைகளின் கீழ் அல்லது வேறு நோய் நிலைமைகளின் காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகளை முகாமைத்துவம் செய்து கொள்வதற்காக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. guruwaraya.lk
கோவிட் பரவல் நிலைமை காரணமாக, பரீட்சை நிலையத்தில் வசதிகளை ஏற்படுத் கொடுப்பதற்கான செயற்பாடுகளை மேற் கொள்ளல் , சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு பரீட்சை நிலைய சூழலை தொற்று நீக்கம் செய்தல் மற்றும் தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்ைககளுக்காக குறித்த பரீட்சை நிலைய பாடசாலை அதிபர் அல்லது பிரதி அதிபர் அல்லது சிரேஷ்ட ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். guruwaraya.lk
இலத்திரனியல் தொடர்பு சாதனங்கள் இணைக்கப்பட்ட கைக்கடிகாரம், தொலைபேசி, ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் பரீட்சை நிலையத்திற்குள் கொண்டு வருதல், பாவித்தல் என்பன முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கடிகாரம், தொலைபேசி மற்றும் அனுமதிக்கப்படாத இலத்திரனியல் சாதனங்களின் மூலம் பரீட்சை மோசடிகளில் ஈடுபடுகின்றனரா என்பது தொடர்பாக விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்ட்டுள்ளன. ஒருவருக்கு பதிலாக இன்னுமொருவர் பரீட்சை எழுதுதல், guruwaraya.lk பாடக் குறிப்புகளை தம் வசம் வைத்துக் கொண்டு விடை எழுதுதல், அடுத்தவரின் உதவியைப் பெறல், அடுத்தவருக்கு உதவுதல், பரீட்சை நிலையத்தில், அதனை அண்மித்த சூழலில் முறையற்ற விதத்தில் செயற்படுதல் என்பன பரீட்சைகள் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கக் கூடிய குற்றங்களாகும். அவ்வாறு மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளில் கலந்து கொள்ள 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதுடன், பரீட்சை பெறுபேறுகளும் இரத்து செய்யப்படும்.
guruwaraya.lk
பரீட்சை நடைபெறும் காலங்களில் அனுமதியற்ற நபர்கள் பரீட்சை நிலையத்தில் நுழைவது தவிர்க்கப்படல் வேண்டும். அப்பாடசாலைகளில் கட்டுமாண வேலைகள், வகுப்புகள் நடாத்தல், விளையாட்டுப் போட்டி நடாத்துதல், கூட்டங்கள் நடாத்துதல் போன்றன தவிர்க்கப்படுவதுடன் மேற்படி விடயங்கள் தொடரர்பாக அதிபர்மார் கவனம் செலுத்தல் வேண்டும்.
guruwaraya.lk
பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பங்களில் வௌிநபர்களால் , பரீட்சகர்களுக்கு ஏதும் இடையூறுகள் விளைவிக்கப்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக பரீட்சைத் திணைக்களத்திற்கும், அன்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்தல் வேண்டும்.
guruwaraya.lk
பரீட்சை மோசடிகள் நடைபெறுமாயின் அல்லது அது தொடர்பான சந்தேகங்கள் நிலவுமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடு பரீட்சைத் திணைக்களத்திற்கு அறியப்படுத்த வேண்டும். இவற்றை விசாரிக்க தனிப்பட்ட விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
0112 784 208 | 0112 784 537 | 0113 188 350 | 0113 140 314 | 1911
0 கருத்துகள்