அதிபர்
ஒவ்வொரு பாடசாலையிலும் ஒரு அதிபர் இருக்க வேண்டும்.
பிரதி அதிபர்
- அதிபர் சேவை, கல்வி நிர்வாக சேவை கீழ் வழங்கப்படல் வேண்டும்.
- ஒரு வாரத்திற்கு 40 நிமிடங்கள் கொண்ட 10 பாடவேளைகள் கற்பிக்க வேண்டும்.
கற்பித்தல் பணி விடுவிப்பு - பிரதி அதிபர்
- 3000 அதிக மாணவர் எண்ணிக்கை எனின், இரண்டு பிரதி அதிபர்கள்
- 2000 - 3000 மாணவர் எண்ணிக்கை எனின் ஒரு பிரதி அதிபரும் கற்பித்தல் பணியிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும்.
www.guruwaraya.lk
பிரதி அதிபர் எண்ணிக்கை
03
உயர்தர மாணவர் எண்ணிக்கை 300 +
6-11 மாணவர் எண்ணிக்கை 500 +
1-5 மாணவர் எண்ணிக்கை 500 +
மொத்த மாணவர் எண்ணிக்கை 2000 +
02
உயர்தர மாணவர் எண்ணிக்கை 150 +
6-11 மாணவர் எண்ணிக்கை 800 +
மொத்த மாணவர் எண்ணிக்கை 1500 +
01
மொத்த மாணவர் எண்ணிக்கை 400 +
www.guruwaraya.lk
உதவி அதிபர்கள்
அதிபர் சேவையின் கீழ் வழங்கப்படல் வேண்டும்.
40 நிமிட பாடவேளைகள் வாரத்திற்கு 12 கற்பித்தல் நடவடிக்கைகள்
02 (ஆரம்பப்பிரிவு மற்றும் இரண்டாம் பிரிவு)
6-11 மாணவர் எண்ணிக்கை 200
1-5 மாணவர் எண்ணிக்கை 500 +
என்ற இரண்டு நிலைமைகளும் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்
www.guruwaraya.lk
02 (இரண்டாம் நிலை பிரிவு)
6-11 மாணவர் எண்ணிக்கை 500 +
உயர்தர மாணவர் எண்ணிக்கை 100 +
என்ற இரண்டு நிலைமைகளும் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
குறிப்பு
பாடசாலை மேற்குறித்த இரண்டு நிலைமைகளுக்கும் உரியதெனின் இரண்டு சந்தர்ப்பங்களின் கீழும் உதவி அதிபர்பளைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆசிரியர்களுக்கான கற்பித்தல் காலம்
ஒரு வாரத்திற்கு 40 பாடவேளைகள். செயற்பாட்டு விடுவிப்புகளைத் தவிர பாடம் சார் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் குறைந்த பட்சம் 30 பாடவேளைகளில் ஈடுபடல் வேண்டும்.
எஞ்சிய பாடவேளைகளில்
- பாடசாலை மட்ட மதிப்பீடு திட்டமிடல்
- பாடத்திட்டமிடல்
- அப்பியாசக் கொப்பி பார்த்தல்
- மேலதிக கற்பித்தல் ஒழுங்கமைப்பு
- கணிப்பீடுகளை மதிப்பிடல்
- கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் அபிவிருத்தி
www.guruwaraya.lk
பாடசாலை அபிவிருத்தி சங்க பொருளாளருக்கு 10 பாடவேளைகளால் விடுவிக்க வேண்டும்.
30 பாடவேளைகளை பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள் விளையாட்டு, அழகியல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் பொறுப்பை ஏற்று அதற்காக விசேட வருடாந்த திட்டமொன்றை தயாரித்து வருடாந்த நேர அட்டவணையுடன் அனுமதி பெற வேண்டும்.
மேற்பார்வை ஆசிரியர்கள்
ஆரம்பப்பிரிவு
வழங்கப்பட்டுள்ள ஆரம்பப்பிரிவு அசிரியர்களுக்கிடையில் இந்தத் தேவைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
இரண்டாம் நிலை (6 - 11)
மாணவர் எண்ணிக்கை 1000 - 1500 : 01
மாணவர் எண்ணிக்கை 1501 - 3000 : 02
மாணவர் எண்ணிக்கை 3001 - 5000 : 03
5000 க்கு மேல் : 04
குறிப்பு
மேற்பார்வையாளர்கள் குறைந்த பட்சம் வாரத்திற்கு 40 நிமிடங்கள் கொண்ட 16 பாடவேளைகள் கடமைபுரிய வேண்டும்.
www.guruwaraya.lk
நூலக பொறுப்பு ஆசிரியர்
நூலகம் ஒன்று காணப்படுமாயின் பாடசாலை நூலக நடவடிக்கைகளுக்காக நூலக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஆசிரியர் ஒருவரை வழங்க வேண்டும்.
மாணவர் ஆலோசனைப் பணிகளுக்கான ஆசிரியர்
மாணவர் எண்ணிக்கை 300 இலும் அதிகம் எனின், மாணவர் ஆலோசனை செயற்பாடுகளுக்காக ஒரு ஆசிரியரை முழுநேரமாக ஈடுபடுத்தல் வேண்டும்.
300 இலும் குறைவு எனின் வேறொரு ஆசிரியரை வாரத்திற்கு 15 பாடவேளைகள் விடுவித்து ஈடுபடுத்தலாம்.
www.guruwaraya.lk
விசேட கல்வி ஆசிரியர்
விசேட கல்வி அலகுகள் அனுமதிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள பாடசாலைககளில் அதற்காக 1: 5 ஆசிரியர் : மாணவர் விகிதப்படி விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களை வழங்க வேண்டும்.
பாடம் கற்பிக்கும் கருவியாக மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு கணினி பாவனை தொடர்பாக தேவைப்படும் ஆசிரியர்
- கணினி ஆய்வு கூடங்கள் உள்ள பாடசாலைகளில் பின்வரும் பணிகளுக்கு ஒரு ஆசிரியர் உரித்தாவார்
- கணினி ஆய்வு கூட பொறுப்பு
- தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பாடத்தை கற்பிக்கும் வேறு பாடங்களை கற்பிக்கும் கணினி ஆய்வுகூடத்தைப் பயன்படுத்துவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்தல்
- தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமைக்கான தரவுகளை உட்சேர்த்தல், பகுப்பாய்வு அறிக்கைகள் தயாரித்தல் மற்றும் அவற்றின் பிழையற்ற தன்மையை உறுதிப்படுத்தல் என்பவற்றினூடாக இற்றைப்படுத்தி நடாத்திச் செல்லல்.
- இ தக்சலாவ, சனல் NIE போன்ற கற்றல் ஊடகங்களைப் பயன்படுத்தி சுயகற்றல் மற்றும் தொலைக்கல்வியை மேற்கொள்வதற்கு திட்டமிடல்
- கணினி ஆய்வுகூடங்களில் காணப்படும் கணினி மற்றும் அதனுடன் தொடர்புடைய பாகங்களின் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- தவணை விடுமுறைக் காலங்களில் கணினி ஆய்வுகூடங்களில் காணப்படும் UPS உள்ளடங்கிய ஏனைய கணினி உபகரணங்களின் பராமரித்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
www.guruwaraya.lk
குறிப்பு
அவ்வாறு காணப்படாத பாடசாலைகளில் கணினி அறிவுடன் கூடிய ஆசிரியர் ஒருவரை 15 பாடவேளைகள் வாரத்திற்கு விடுவித்து தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையை இற்றைப்படுத்தி நடாத்திச் செல்லவும் பாடசாலை முகாமைத்துவ நடவடிக்கைகளுத் தேவையான கணினி மூலமாக நிறைவேற்றக் கூடிய பணிகளுக்காகவும் ஈடுபடுத்தலாம்.
பூரண விளக்கத்திற்கு பின்வரும் இணைப்பில் உள்ள சுற்றறிக்கையை பார்க்கவும்.
0 கருத்துகள்