பாடசாலைகள் மீள ஆரம்பித்தல் தொடர்பாக 2021 மே மாதம் 07 ஆம் திகதி கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
பாடசாலைகள், பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகள் என்பன மீள அறிவிக்கும் வரை ஆரம்பிக்கபட மாட்டாது என அவ்வறிவித்தல் தெரிவிக்கின்றது.
நாட்டில் நிலவும் கோவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டாதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடராக கொண்டு செல்ல அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், கோவிட் அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்குவதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பாக குறைந்தது 3 நாட்களுக்கு முன்னர் அறிவித்தல் விடுக்கப்படும் என்று அவ்வறிவித்தல் சுட்டிக்காட்டுகின்றது.
0 கருத்துகள்