2021 ஆம் ஆண்டு ஜன் மாதம் 11 ஆம் திகதி வௌியிடடப்பட்ட வர்த்தமானி பத்திரிகையில் வௌிவந்த முக்கிய விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
திருத்தம்
கிராம அலுவலர் III ஆந் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2020 (2021)
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி 2021.07.19 ஆக நீடிக்கப்பட்டுள்ளது
திறமை அடிப்படையில் கிராம அலுவலர் சேவையின் அதிஉயர் தரத்துக்கு பதவியுயர்விற்கான போட்டிப் பரீட்சை - 2021
கிராம அலுவலர் சேவையின் அதிஉயர் தரத்தின் பதவியுயர்விற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2021
கிராம அலுவலர் I ஆந் தரத்துடைய அலுவலராக இருத்தல்
அல்லது
உரிய திகதிக்கு குறைந்தபட்சம் கிராம அலுவலர் II ஆம் தரத்தில் 08 வருடங்களுக்குக் குறையாத முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக்காலத்தைப் ப{ரணப்படுத்திய கிராம அலுவலர் II ஆம் தரத்துடைய அலுவலராக இருத்தல்
அல்லது
குறைந்தபட்சம் கிராம அலுவலர் II ஆம் தரத்தில் 05 வருடங்களுக்குக் குறையாத முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக் காலத்தைக் கொண்ட பட்டதாரியாக இருத்தல்.
மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் தொழில்வல்லுனர்களின் சேவைக்கு வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிக்காக சுகாதார பட்டதாரிகள் ஆட்சேர்த்தல் - 2021
மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர
மருந்தாளர்
கதிரியலாளர்
இயன் மருத்துவ சிகிச்சையாளர
தொழில் வழி சிகிச்சையாளர
அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் (சிங்களம் / தமிழ்) (சிங்களம் / ஆங்கிலம்) (தமிழ் /ஆங்கிலம்) தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021
தமிழ், சிங்களம், ஆங்கில மொழி / ஆங்கில இலக்கியம் ஆகிய பாடங்களில் இரண்டு (02) பாடங்களுடன் கணிதம் உட்பட நான்கு (04) பாடங்களுக்கு திறமைச் சித்திகளுடன் ஒரே தடவையில் ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
மற்றும்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் (பொது அறிவுப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒரே தடவையில் மூன்று (03) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் போதுமானதாகும்.)
ஏனைய சர்வதேச மொழிகளில் கொண்டிருக்கும் அறிவு மேலதிக தகைமையாகக் கொள்ளப்படும்.
18 வயதிற்கு குறையாமலும் 32 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும
வர்த்தமானியை பதிவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்பை அழுத்தவும்
0 கருத்துகள்