கோவிட் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டியுள்ளதால், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக அனைவருக்கும் கல்வியை வழங்கும் நோக்கில், ஆரம்ப கட்டமாக மாணவர் எண்ணிக்ைக 100 இலும் குறைவாக உள்ள பாடசாலைகளை சுகாதார துறையின் பூரண அறிவுறுத்தல்களுக்கு அமைய ஜூலை மாதத்தில் மீள திறக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என 02 ஜூலை 2021 ஆம் திகதி இன்று கல்வி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இதற்காக அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும். மாணவர் எண்ணிக்கை 50 இலும் குறைவான 1439 பாடசாலைகளும், 51 - 100 க்கு இடைப்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 1523 உம் காணப்படுகின்றன. இந்த 2962 பாடசாலைகளையும் முதற் கட்டமாக திப்பதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது . ஏனைய பாடசாலைகளை முறையான திட்டமிடல்களுக்கு ஏற்ப மீள திறப்பதற்கான நடவடிக்ைககள் எடுக்கப்படும்.
அதனடிப்படையில் அனைத்து ஆசிரியர்கள், அதிகாரிகள், அதிபர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு , மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப பெற்றோர்களுக்கு நம்பிக்கையூட்டப்படும். தொலைகல்வி நடவடிக் கைகளை மேற்கொள்ள பிரச்சினைகளை கொண்ட பாடசாலைகள் 6 % காணப்படுகின்றன.
இணைய வசதியற்ற மாணவர்களுக்கு வசதிகளை வழங்க நாடளாவிய ரீதியில் 2000 நிலையங்களை திறக்கவும், மஹிந்தோதய ஆய்வு கூடம், பாடசாலை, மதஸ்த்தலங்கள் பயன'படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவ்வாறான 2096 நிலையங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இவை எதிர்வரும் ஜூலை 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
அச்சுப்பிரதிகளை வழங்குவதற்காக மாகாண கல்வி அலுவலகங்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மாகாண ரீதியில் கல்வி நடவடிக்ைககளை மேற்கொள்ள வழகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. குரு கெதர தொலைகாட்சி அலைவரிசை மூலம் பாலை 4 மணி லரபடக்கம் இரவு 11 மணி வரை கல்வி ஔிபரப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
அத்துடன் அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்களை நடாத்த செடலைட் தொலைகாட்சி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. வீட்டை அடிப்படையாகக் கொண்ட கற்றல் - கற்பித்தல் நடவடிக்ைககள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தரம் 5, 11 மற்றும் உயர்தர வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
தொலை கல்வி நடவடிக்ைககள் பெற முடியாத மாணவர்களுக்கு நிறுவப்பட்டுள்ள கற்றல் மத்திய நிலையங்களுக்கு வருகை தர முடியாத மாணவர்கள் இலங்கை போக்குவரத்து சபையுடன் தொடர்பு கொண்டு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்
0 கருத்துகள்