2020/2021 ஆம் கல்வியாண்டுக்கு பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது போன மாணவர்களுக்கான சலுகைக் காலம் தொடர்பில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.
ஜூலை 26 ஆம் திகதி முதல் ஜூலை 30 வரை 5 நாட்களுக்கு இச்சலுகைக் காலம் வழங்கப்படும். சலுகைக் காலத்தில் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு தமது விருப்ப ஒழுங்கை மாற்றிக் கொள்வதற்காக ஒரே ஒரு தடவை சந்தர்ப்பம் வழங்கப்படும். இதற்காக ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 14 வரை இரு வார கால அவகாசம் வழங்கப்படும்.
இவ்வாறு அவ்வறிக்கை சுட்டிகாட்டுகின்றது
0 கருத்துகள்