அநேகமானோர் விண்ணப்பங்கள் நிரப்பும் போது அல்லது அலுவலகங்களில் சில படிவங்களை நிரப்பும் போது குழப்பத்திற்குள்ளாகும் விடயம் தமது வதிவிடத்திற்குரிய பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவகர் பிரிவு என்பவற்றை சரியாக அடையாளப்படுத்த முடியாமையாகும்.
படிவங்களில் இவற்றை நிரப்பும் போது தௌிவாக குழப்பமின்றி வழங்குவதற்காகவே இந்த தகவல் பகிர்வு.
பின்வரும் நிகழ்நிலை இணைப்பை அழுத்தி, உங்களது மாகாணம், மாவட்டம் என்பவற்றை தெரிவு செய்யும் போது அதற்கு கீழே காண்பிக்கப்படும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உங்களுக்கு உரியதை தெரிவு செய்ய, அதன் கீழ் காண்பிக்கப்படும் கிராம சேவகர் பிரிவை தெரிவு செய்ய நீங்கள் வதியும் கிராமத்தை தெரிவு செய்யலாம்.
இறுதியில் உங்களது கிராமம் காண்பிக்கப்படும் போது உங்கள் தெரிவுகள் சரியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இறுதித் தெரிவின் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் குறியீடு உங்களது வதிவிடத்திற்குரிய இடக்குறியீடாகும்.
கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்
0 கருத்துகள்