இ கற்றல் உள்ளடக்கங்களை தயாரிக்கும் வளவாளர் குழாம்


விண்ணப்பங்களுக்கான இணைப்பு பின்னர் பதிவேற்றப்படும்.

கல்வி அமைச்சினால் படைப்பாற்றல் மிக்க ஆசிரியர்களிடமிருந்து, இ கற்றல் உள்ளடக்கங்களை தயாரிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தேசிய ரீதியில் உருவாக்கப்படும் வளவாளர் குழாமில் இணைந்து செயற்பட சந்தர்ப்பம்.

நான்கு வகையாக உள்வாங்கப்படுகின்றனர்.
  1. தொலைகாட்சி மற்றும் யூடியுப் மூக கற்பித்தல் உள்ளடக்கங்கள் தயாரித்தல்
  2. ஈ தக்சலாவ கற்றல் முகாமைத்துவ கற்றல் உள்ளடக்கங்கள் தயாரித்தல்
  3. வினா வங்கி ஒன்றை தயாரித்தல்
  4. ஈ தக்சலாவ கற்றல் உள்ளடக்க முறைமைக்கு தேவையான மென்பொருள் செயற்பாடுகள்.

விண்ணப்ப முடிவு 06 ஆகஸ்ட் 2021

விண்ணப்பப் படிவங்களை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.



கொவிட் நிலைமைகளின் காரணமாக பரிந்துரைகளை பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில், தாங்களாகவே விண்ணப்பங்களை தயாரித்து அல்லது பதிவிறக்கம் செய்து தங்கள் கையொப்பத்துடன் மாத்திரம் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபாலினூடாக அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி - infosmoer@gmail.com


நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும் போது முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். எனினும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும் சந்தர்ப்பத்திலும் இத் தொற்றுநோய் நிலைமை தொடர்கிறது எனின் இறுதியாக பணியாற்றுவதற்காக நியமனம் செய்யப்பட்ட நியமனக் கடிதத்தின் பிரதி ஒன்றையேனும் சமர்ப்பித்தல் வேண்டும்.

சில சமயங்களில் நேர்முகப் பரீட்சை நிகழ்நிலையில் நடைபெறும்

 



கருத்துரையிடுக

0 கருத்துகள்