பாடசாலை அதிபர்களின் அவதானத்திற்கு



சூம் பெக்கேஜ்களை வழங்கும் பின்னணியில் பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் மாணவிகளை இணையம் வழியாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றஞ்சாட்டில் 28 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

பிட்டாபெதராவில் உள்ள ஒரு பாடசாலை அதிபர், அப்பகுதியைச் சேர்ந்த பல பா்சாலை மாணவிகள் இணையம் வழியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக முறைப்பாடு அளித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.




மாத்தறை பொலிஸ் நிலையத்தில் மேற்படி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் அதிகாரியாக 2 ஆண்டு சேவையை முடித்துள்ளார் என்பது தெரியவந்தது.




சந்தேகநபர் பல பெண் மாணவிகளின் தொலைபேசி எண்களை அவர்களின் நிகழ்நிலை கல்விக்கு உதவ ஜூம் பெக்கேஜ் வழங்கும் போர்வையில் பெற்றுள்ளார்.




இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசி எண்களைப் பெற்ற பின்னர், சந்தேக நபர் அவர்களை இணையம் மூலம் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் மற்றும் மாணவர்களின் நிர்வாண புகைப்படங்களையும் பெற்றுள்ளார்.




தம்புத்தேகமவில் வசிக்கும் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு இன்று மொராவக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என செய்திகள் தெரிவிக்கின்றன.




இந்த சம்பவம் குறித்து விசேட விசாரணை ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்