W & OP யார் மீள்பதிவு செய்ய வேண்டும்
உங்களது அட்டை நிகழ்நிலையில் இருப்பின் மீள பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உங்களது அட்டை நிகழ்நிலையில் இல்லை எனின் மீள் பதிவு செய்ய வேண்டும்.
மீள் பதிவு செய்ய அவசியமானவை
1. முழுப்பெயர்
2. தேசிய அடையாள அட்டை இல
3. பிறந்த திகதி
4. பாலினம்
5. முகவரி
6. தொலைபேசி இல
7. மாவட்டம்
8. பிரதேச செயலாளர் பிரிவு (DS Division
9. கிராம அலுவலர் பிரிவு
10. W & OP இலக்கம்
11. சம்பள குறியீடு
12. நியமனத் திகதி
13. வாழ்க்கைத்துணை தொடர்பான தகவல்கள் (முழுப்பெயர், தே, அ. அ இலக்கம், பிறந்த திகதி, பிறப்புச் சான்றிதழ் இலக்கம், திருமணத் திகதி, திருமணப்ப்திவு சான்றிதழ் இல, )
14. பிள்ளைகள் தொடர்பான திகதி (பிறந்த திகதி, பாலினம்)
நிறுவனம் வழங்கும் போது ஆசிரியர்கள் தமது வலயக் கல்வி அலுவலகத்தை வழங்கவும். சம்பளக் குறியீடு வகுப்பு 3 எனின் ge - 1 - 2016, வகுப்பு 2 அல்லது 1 எனின், ge - 2 - 2016, அதிபர் சேவையாயின்,ge - 4 2016
அடுத்த பக்கத்திற்கு செல்ல முடியாதிருப்பின் இளம் சிவப்பு நிற பின்னணி வர்ணக் கூட்டில் மீள தரவை உட்செலுத்துங்கள். இல்லாது விடின் அதற்கு முந்தைய பக்கம் அல்லது ஆரம்பத்திலிருந்து மீளச் செய்யுங்கள். கணினி மூலம் செய்யும் போது தவறுகள் ஏற்படுவது குறைவு
மீள் பதிவுகள் 31 ஜூலை 2021 க்கு முதல் செய்யப்படல் வேண்டும்.
இணையத்தில் எவ்வாறு கார்ட் இருப்பதை பார்ப்பது
தரப்பட்ட இணைப்பை அழுத்தி தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்த (இணைப்பு இறுதியாக வழங்கப்பட்டுள்ளது.)
3 வகையான பெறுபேறுகள் கிடைக்கும்.
கார்ட் காண்பிக்கப்படும்.
கார்ட் காண்பிக்கப்படாது, ஆனால் re registered என்ற நிலையை காட்டும்
கார்ட் காண்பிக்கப்படாது, ஆனால் re register என்ற சொல் இருக்காது.
அதாவது,
முதலாவது,
கார்ட் இருந்தால் மீள பதிவு செய்ய தேவையில்லை
பின்வருமாறு மெசேஜ் வந்தால்
இரண்டாவது,
கார்ட் இல்லை ஆனால் பின்வரும் மெசேஜ் வந்தால்,
Your WNOP number is still not available. Your Registration status is Re-Registered
மீள பதியப்பட்டுள்ளது. கார்ட் கிடைக்கும். வேறு ஒன்னும் செய்ய தேவையில்லை
பின்வருமாறு
மூன்றாவது,
கார்ட் இல்லை ஆனால் பின்வரும் மெசேஜ் வந்தால்,
Your WNOP number is still not available. Your Registration status is
நீங்கள் நிகழ்நிலையில் மீள பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்திருந்தால் உங்களது கோவைக்குப் பொறுப்பானவருக்கு, நீங்கள் நிகழ்நிலையில் பதிவு செய்தமை தொடர்பில் அறிவிக்க வேண்டும்.
பின்வருமாறு
0 கருத்துகள்