பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்




பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. 2021 ஆகஸ்ட் 06 ஆம் திகதி வௌியிடப்பட்ட மேற்படி அறிவித்தலில், கல்வி சார் ஊழியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
guruwaraya.lk

அரச சேவைகளை வழமையான நிலையில் கொண்டு செல்லல் தொடர்பாக வௌியிடப்பட்ட 02/2021(IV) ஆம் இலக்க சுற்றுநிருபம் தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள இவ்வறிவித்தலில்,
guruwaraya.lk

அதில் குறிப்பிடப்பட்டுள்ள 03, 04 ஆம் பந்திகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அவ்வாறே இருக்கும். பாடசாலை ஊழியர்களின் கடமை தொடர்பில் இக்கடிதம் மற்றும் பொது நிர்வாக அமைச்சு வௌியிட்ட சுற்றறிக்கையினைக் கொண்டு செயற்படல் வேண்டும்.
guruwaraya.lk

மாகாண கல்வி திணைக்களங்கள், வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி காரியாலயங்கள்  என்பன பொது நிர்வாக அமைச்சு வௌியிட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் நடந்து கொள்ளல் வேண்டும்.

guruwaraya.lk

பாடசாலைகளைப் பொருத்த வரையில், கல்வி சாரா ஊழியர்களை சுழற்சி அடிப்படையிலோ அல்லது வேறு ஏதும் பொருத்தமான முறையின் அடிப்படையில் கடமைக்கு அழைக்கலாம். கோவிட் பரவல் வீரியமடைந்துள்ள இந்நிலைமையில் அனைவரையும் பணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. 

கல்வி சார் ஊழியர்களைப் பொருத்த வரையில் இது வீட்டில் இருந்து பணி புரியும் காலப்பகுதியாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரம் வரையறுக்கப்பட் அளவில் கல்வி சார் ஊழியர்களை அதிபருக்கு அழைப்பிக்க முடியும்.
guruwaraya.lk

சேவை நிலையத்திற்கு சமூகமளிக்காது வீட்டில் இருந்து வேலை செய்யும் காலப்பகுதியில் ஆசிரியர்கள் நிகழ்நிலை கற்பித்தலை அல்லது வேறு மாற்று வழிகளை பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக கல்விச் செயலாளர் மேற்படி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

சிங்கள கடிதத்தின் மொழிபெயர்ப்பு

கருத்துரையிடுக

0 கருத்துகள்