இலங்கை கணக்காளர் சேவை III மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு 2021



இலங்கை கணக்காளர் சேவையின் தரம் III பதவிகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்குத் தகைமையுடைய இலங்கை பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வெற்றிடங்களின் எண்ணிக்கை - 101

கல்வி/ தொழில்சார்/அனுபவம் குறித்த தகைமைகள்:-

i. பின்வரும் ஏதேனும் ஒரு தகைமையுடன் விண்ணப்பங்கள் கோரப்படும் அறிவித்தல் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் தினத்தன்று அரசாங்க/மாகாண அரசாங்க சேவையில் 05 வருடங்களுக்குக் குறையாத திருப்திகரமான, தொடர்ச்சியான, நிரந்தர சேவைக் காலத்துடன் உரிய தினத்தன்று குறைந்தபட்சம் 5சம்பளவேற்றங்களைப் பெற்றிருத்தல்.

  1.  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் வர்த்தகம்,முகாமைத்துவம், கணக்கீடு, பொருளியல் போன்ற துறைகளில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல்; அல்லது
  2. இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின்ஃஇலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவகத்தின் கணக்கீடு அல்லது வர்த்தகம் பற்றிய உயர் டிப்ளோமாவைப் பெற்றிருத்தல் அல்லது உயர் தேசிய முகாமைத்துவ டிப்ளோமாவைப் பெற்றிருத்தல் ; அல்லது
  3. இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் அல்லது வேறேதும் பொதுநலவாய நாடொன்றின் பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றின் தகுதிச் சான்றுடைய ஐஐ அல்லது இடைநிலைப் பரீட்சை அல்லது கணக்கீடு மற்றும் வியாபார சான்றிதழ் ஐஐ அல்லது வியாபார படிமுறை பரீட்சை அல்லது நிறுவனம்சார் படிமுறை பரீட்சை அல்லது அதனிலும் உயர் பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்; அல்லது
  4. ஐக்கிய இராச்சியத்தின் அல்லது வேறு யாதேனுமொரு பொதுநலவாய நாட்டின் பட்டயம் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர் நிறுவகமொன்றினால் நடாத்தப்படும் செலவினம் மற்றும் முகாமைத்துவம் பரீட்சையின் ஐ மற்றும் ஐஐ பகுதிகளில் அல்லது இடைநிலைப் பரீட்சையில் அல்லது அதனிலும் உயர் பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்; அல்லது
  5. ஐக்கிய இராச்சியத்தின் அல்லது வேறு யாதேனுமொரு பொதுநலவாய நாட்டின் சான்றிதழ் பெற்ற கணக்காளர்களின் கணக்கியல் நிறுவனத்தின் ஐ ஆவது தொழில்சார் மட்டத்தைச் சேர்ந்த அல்லது அதனிலும் உயர் மட்டத்திலான பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்; அல்லது
  6. ஐக்கிய இராச்சியத்தின் அல்லது வேறு யாதேனுமொரு பொதுநலவாய நாட்டின் சான்றிதழ் பெற்ற கணக்காளர்களின் பட்டயச் சங்கத்தின் ஐ மற்றும் ஐஐ பகுதிகளுக்குரிய பரீட்சையில் அல்லது அதனிலும் உயர் மட்டத்திலான பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்; அல்லது
  7. ஐக்கிய இராச்சியத்தின் செயலாளர்கள் மற்றும் நிருவாகிகளின் பட்டய நிறுவகத்தின் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அல்லது
  8. இலங்கை சான்றிதழ் பெற்ற முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் முகாமைத்துவ மட்ட அல்லது அதனிலும் உயர் மட்டத்திலான பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அல்லது

(ii) அரசாங்க அல்லது மாகாண அரசாங்க சேவையில் நிரந்தரமானதும் ஓய்வு{திய உரித்துடையதுமான MN 1 - 2006 (A) எனும் சம்பள அளவுத் திட்டம் அல்லது அதிலும் கூடிய சம்பள அளவுத் திட்டமொன்றினைக் கொண்டுள்ள பதவியொன்றில் 10 வருடங்களுக்குக் குறையாத திருப்திகரமான சேவைக் காலம் ஒன்றினைப் பு{ர்த்தி செய்திருத்தல் மற்றும் உரிய தினத்தன்று ஆகக் குறைந்தது 10 சம்பள ஏற்றங்களைப் பெற்றிருத்தல்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்