2020 உயர்தர மீள்திருத்த பெறுபேறுகள் டிசம்பருக்கு முன்


க.பொ.த உயர்தர பரீட்சை 2020 இன் மீள்திருத்தப் பெறுபேறுகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் வௌியிட முடியுமாக இருக்கும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், குறித்த பாடநெறிகளுக்காக இஸட் வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளது. மீள் திருத்தப் பெறுபேறுகள் வரும் வரை காத்திருக்காது அவை வௌியிடப்பட்டமை சிறப்பம்சமாகும்.

மீள்திருத்தப் பணிகளின் போது, பெறுபேறு உயர்வடையும் மாணவர்களுக்கு மாத்திரம் அவர்களின் இஸட் புள்ளி அதிகரிக்கப்படுவதுடன், அவற்றுக்கு இணையாக ஏனைய மாணவர்களின் இஸட் புள்ளிகளில் குறைவு ஏற்படமாட்டாது, அவற்றை நிலையாக வைத்திருக்க விசேட அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீள்திருத்தப் பணிகளின் போது வெறும் 0.17 % ஆன மாணவர்களின் பெறுபேறுகளிலேயே மாற்றம் ஏற்படுவதாகவும், அதனடிப்படையில் அவர்களின் இஸட் புள்ளிகளில் மாத்திரம் மாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்