2021 பாடசாலை கல்வியாண்டு



2021 ஆம் ஆண்டு பாடசாலை கல்வியாண்டு தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.


2021 கல்வியாண்டுக்கான பரீட்சைகள்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 22.01.2022
க. பொ.த உயர்தர பரீட்சை 07.02.2022 - 05.03.2022
க.பொ.த சாதாரண தர பரீட்சை 23.05.2022 - 01.06.2022

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டவுடன் தரம் 10, 11 கற்பித்தல் செயற்பாடுகள் நிறைவேற்றுவது தொடர்பில் வௌியிடப்பட்ட அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்கள் சம்பந்தமான வழிகாட்டல் வழங்குதல் தொடர்பில் வௌியிடப்பட்ட 09.11.2021 கடிதம் இரத்துச் செய்யப்படுகின்றது.

பொதுப் பரீட்சைகள் நடாத்தும் தரங்களுக்கு உரிய பாடவிதானத்தை நிறைவு செய்து கொள்வதற்கு போதிய கால அவகாசம் இருப்பதால் குறித்த பாடத்திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படல் வேண்டும்.

2021 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் நிறைவுறுவதும், 2022 ஆம் ஆண்டு கல்வியாண்டு ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்

அனைத்து பாடசாலைகளுக்கும்

நத்தார் பண்டிகைக்கான விடுமுறை 
23.12.2021

நத்தார் பண்டிகையின் பின் பாடசாலை மீள ஆரம்பித்தல் 
27.12.2021

உயர்தர பரீட்சை (2021) நடாத்துவதற்கான விடுமுறை வழங்கல் 
03.02.2022
(பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது)

உயர்தர பரீட்சையின் பின்னர் பாடசாலை மீள ஆரம்பித்தல் 
07.03.2022

சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு
சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான 2021 தவணை நிறைவு 
08.04.2022
(09.04.2022 தொடக்கம் 17.04.2022 வரை விடுமுறை)

2022 வருட சிங்கள, தமிழ் பாடசாலை ஆரம்பம் 
18.04.2022

முஸ்லிம் பாடசாலைகள்

முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2021 தவணை நிறைவு 
01.04.2022
(02.04.2022 தொடக்கம் 03.05.2022 வரை விடுமுறை)

முஸ்லிம் பாடசாலை ஆரம்பம் 
04.05.2022

2021 க. பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 18.04.2022 நிறைவுறும். எனினும் அதன் பின்னர் அவர்களுக்கு மேலதிவ விசேட கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

2022 கல்வியாண்டு தொடர்பான விடயங்கள் பின்னர் அறிவிக்கப்படும்




கருத்துரையிடுக

0 கருத்துகள்