அன்மைய நாட்களில் டெங்கு வகை 3 பரவல் காரணமாக , அவை குழந்தைகளுக்கு தொற்றி இரண்டு நாட்கள் செல்லும் போது அவதானம் மிகுந்த நிலைமைக்கு அல்லது சிக்கலான நிலைக்கு கொண்டு செல்லும் நிலைமை உள்ளதாக ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாக தினமின நாளிதழ்செய்தி வௌியிட்டுள்ளது.
சிறுவர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படின் , அது டெங்குவாக இருக்கலாம் என கருதி, தகுதி வாய்ந்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளார்.
தற்போது காய்ச்சல் ஏற்பட்டால் அது கொவிட் என நினைக்காது, டெங்கு என சந்தேகித்து சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
சிறுவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு , சிகிச்சை பெறாது அது சுகமாகும் என இருக்க வேண்டாம் என பெற்றோர் மற்றும் முதியவர்களிடம் வேண்டியுள்ளார். சிகிச்சை பெறாது விடின், டெங்கு சிக்கல் நிலையை தோற்றுவித்து மரணம் ஏற்படக் கூடிய நிலைமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
0 கருத்துகள்