கல்வியியற் கல்லூரி விண்ணப்ப மேன்முறையீடு



கல்வியியற் கல்லூரி விண்ணப்ப மேன்முறையீடுகள் பெப்ரவரி 28, 2023 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியியற் கல்லூரி அனுமதிக்காக விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வுக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு இம்மாதம் 28 ஆம் திகதி வரை மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் (கல்வியற் கல்லூரி) திருமதி எச்.எச்.வீ.எம். சஞ்ஜீவனி தெரிவித்துள்ளதாக தினமின (15.02.2023) செய்தி வௌியிட்டுள்ளது.

கல்விப் பணிப்பாளர் ( கல்வியியற் கல்லூரி), கல்வியியற் கல்லூரி கிளை, கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல னும் முகவரிக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் எனவும், கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் 2019/2020 கல்வியியற் கல்லூரி அனுமதி மேன்முறையீடு என குறிப்பிடப்படல் வேண்டும்.

சமர்ப்பிக்க  வேண்டிய தகவல்கள்
  •  

77000 விண்ணப்பங்களில் 6820 மாணவர்களை தெரிவு செய்வதற்காக20 40 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கல்வியற் கல்லூரி அனுமதிக்கு விண்ணப்பித்தவர்கள் தாம் தெரிவு செய்யப்படாமைக்கான காரணத்தை அறிந்து கொள்ளும் உரிமையை கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்