கிரைம் அப்டேட் - 31 மார்ச் 2023

31 மார்ச் 2023 ஆம் திகதி வௌியாகிய தினமின பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த குற்றச் செயல்கள் தொடர்பிலான விடயங்களை இங்கு பகிர்கின்றோம். குறித்த விடயங்கள் போலியாக, திட்டமிட்ட சதியாக இருக்கவும் கூடும். எனினிம் உங்களையும், உங்களைச் சூழ உள்ளவர்களையும் பாதுகாக்க இவை முன்னெச்சரிக்கை பதிவுகளாக அமையட்டும்

சம்பவம் 1
தரம் 11 மாணவனுக்கு ரீப்ப பட்டியால் தண்டித்த ஆசிரிய மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை கேலி செய்த தரம் 11 மாணவர்களை குறித்த மதகுரு தண்டித்துள்ளார்.

குறித்த மாணவன் மேற்படி சம்பவத்தில் தொடர்புபடவில்லை எனவும், மேற்படி தாக்குதல் சம்பந்தமாக குறித்த மாணவனின் தந்தை பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி மதகுரு ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்

சம்பவம் 2
19 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பப் பாடசாலை ஒன்றின் தரம் 4 இல் கல்வி கற்ற மாணவிக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் வழங்கிய பாடசாலையின் அதிபருக்கு 30 வருட சிறைத் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. 2004 ஜனவரி முதல் ஒக்டோபர் காலப்பகுதியில் மேற்படி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பில் 3 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

சம்பவம் 3
போதைப் பொருள் பாவனை தொடர்பில் யாழ்பபாணத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 1 மாணவனும், 1 மாணவியும் உள்ளடங்குவதாக குறித்த செய்தி தெரிவிக்கின்றது. யாழ்ப்பாண பொலிசின் போதைப் பொருள் தடுப்புப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த பெண்மனியிடம் இருந்து கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்படி 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் 4
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவியை பாடசாலைக்கு அனுப்பாமல் தனது மோட்டார் வாகனத்தில் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்று துஸ்பிரயோக்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவரின் கைது  தொடர்பான தகவலை குறித்த செய்தி தெரிவிக்கின்றது.

காலையில் பாடசாலைக்கு சென்ற தனது மகள் மாலை நேரமாகியும் வீடு திரும்பாததால் , அதிபரை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த மாணவி பாடசாலைக்கு வரவில்லை என அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடரர்பில் தந்தை விசாரணை செய்த போது, தனது மகள் பாடசாலை செல்லாமல் கார் ஒன்றில் ஏறிச் சென்ற தகவலை அறிந்து, அது தொடர்பில் தேடியறிய சென்ற போது, குறித்த மாணவி வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

மகளிடம் விசாரணை செய்த போது குறித்த ஆசிரியருடன் சென்றதாக குறிப்பிட, குறித்த ஆசிரியரை தொடர்பு கொண்ட போது, குறித்த மாணவியை தான் அழைத்துச் சென்றதாகவும், தவறு நிகழ்ந்துள்ளதாகவும், அதை ஏற்றுக் கொள்வதாகவும், பொலிசில் இது தொடர்பாக முறைப்பாடு செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது பாடசாலையில் கல்வி பயிலும் 12 மாணவிக்கே மேற்படி ஆசிரியர் தவறிழைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் 5
மனநோயால் பாதிக்கப்பட்ட 20 வயது யுவதியை துஸ்பரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 51 வயதான குறித்த யுவதியின் தந்தை மற்றும் 56 வயதான பெரிய தந்தை இருவரையும் பொலிசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்