கல்விசாரா ஊழியர்களின் இடமாற்றம்



கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட கல்விசாரா ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது

2023.02.16 ஆம் திகதிய ED/05/67/37/07(I) என்ற கடிதம் தொடர்பானது.

மேற்படி இடமாற்றம் தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவின் தீர்வுகள் கிடைக்கப் பெறாததால், மேற்படி அனைத்து இடமாற்றங்களும் 03.04.2023 ஆம் திகதி நடைமுறைக்கு வரும்.

2022 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த இடமாற்றம் தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டு, இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத இடமாற்றங்களும் மேற்படி குறித்த திகதியில் அமுலாகும்.

இரண்டாம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் அரச சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ள இடமாற்ற மேன்முறையீடுகள் தொடர்பிலான முடிவுகள் கிடைக்கப் பெற்றதும் அவை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வௌியிடப்படும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்