குற்றங்கள் தொடர்பான அப்டேட்



அறிந்து கொள்வதற்காகவும், தம்மையும் தம்மைச் சூழ உள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ளவும், முன்னெச்சரிக்கையாகவும், அவதானமாக இருக்கவும் இவை பகிரப்படுகின்றன.

குற்றங்கள் உண்மையாகவோ அல்லது திட்டமிடப்பட்ட குற்றச்சாட்டாகவோ இருக்கலாம். குற்றங்கள் நடைபெறுவதிலிரிந்து தம்மை சார்ந்தவர்களை பாதுகாத்துக் கொள்ளவும், திட்டமிடப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இவை உதவும்

சம்பவம் 1

23 வயது பெண்ணை சந்திப்பதற்காக சென்ற 70 வயது நபரினை, பாழடைந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடமிருந்த பணம், நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற கும்பலை தேடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனது கடைக்கு முன்னால் தற்காலிக விடுதியில் தங்கியிருந்த யுவதியுடன் தொடர்புகளை உருவாக்கிக் கொண்ட குறித்த நபர், அவரை காண்பதற்காக குறித்த இடத்திற்கு சென்று அவர் வரும் வரை காத்திருந்துள்ளார்.

அவ்விடத்திற்கு வருகை தந்த அறிமுகமில்லாத இரு நபர்கள் அவரை கொலை செய்வதாக அச்சுறுத்தி, அவரை கட்டி வைத்து அவரிடமிருந்த பெறுமதியான நகை , பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அத்துடன் அவரது வங்கி அட்டையின் மூலம் பொருட்களையும்  கொள்வனவு செய்துள்ளனர்.

விசாரைணகள் மூலம் அறிய வந்துள்ளதானது, குறித்த கொள்ளளைச் சம்பவம் திட்டமிடப்பட் சம்பவம் எனவும், குறித்த பெண் இது போன்ற மோசடிகளை திட்டமிட்டு செய்யக் கூடியவர் எனவும் அது தொடர்பில் குறித்த பெண்ணையும் கைது செய்ய விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் 2

17 வயது பாடசாலை மாணவியை அச்சுறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை சந்தேக நபர் அச்சுறுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மாணவியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்ததையிட்டு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்


சம்பவம் 3

பாடசாலையில் தரம் 11 இல் கற்கும் மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பெயரில் பாடசாலை பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதி அதிபரப் இதற்கு 2 வருடங்களுக்கு முன்னரும் குறித்த பாடசாலையில் பிரிதொரு மாணவிக்கு இவ்வாறான சேஸ்டைகள் புரிந்துள்ளமை அறியப்பட்டுள்ளது. 

குறித்த மாணவியுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி சிறிது காலத்தில் குறித்த மாணவி வேறு  ஒரு நபருடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்த, குறித்த தொடர்பை நிறுத்துமாறும் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சந்தேக நபர் குறித்த மாணவிக்கு அறிவித்துள்ளார்.

தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலைமையில், சந்தேக நபர் மனநல வைத்தியர் ஒருவருக்கு அனுப்பப்பட்டு அறிக்கை பெறப்படவுள்ளது்




கருத்துரையிடுக

0 கருத்துகள்