தேசிய கல்வி நிறுவகத்தின், உட்படுத்தற் கல்வித்துறையினால் நடத்தப்படும் விசேட கல்வி டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.
கற்கைநெறியின் இயல்பு
இது, பார்வைக் குறைபாடு, கேட்டல் குறைபாடு, உடல்சார்ந்த குறைபாடு, மந்தநிலை, ஒட்டிசம் நிலை, வேறு கற்றல் குறைபாடுகளால் ஏற்படுகின்ற கற்றல் பிரச்சினைகள் மற்றும் விசேட கல்வித் தேவைகளை எதிர்நோக்கும் மாணவர்களை இனங்கண்டு, அவர்களை விருத்தி செய்வதற்குத் தேவையான அடிப்படைத் தேர்ச்சிகளை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தும் பகுதி நேரக் கற்கைநெறியாகும். விரிவுரைகள் தெரிவு செய்யப்பட்ட விசேட பாடசாலைகளில் கல்வி அமைச்சினால் பாடநெறி தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தராதர நியமங்களின் அடிப்படையில் (Sri Lanka Qualifications Framework) இக் கற்கைநெறி தயாரிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்
2023.11.15 அன்று 55 வயதிற்கு குறைந்தவராக இருத்தல்.
க.பொ.த (உ/த) சித்தியடைந்து இருத்தல்.
அத்துடன்
ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, கல்வியியலாளர் சேவை, கல்வி நிர்வாக சேவை அல்லது விசேட கல்வி நிறுவனமொன்றில் கடமையாற்றுபவராக இருத்தல்
ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, கல்வியியலாளர் சேவை, கல்வி நிர்வாக சேவை அல்லது விசேட கல்வி நிறுவனமொன்றில் கடமையாற்றுபவராக இருத்தல்
விண்ணப்ப முடிவு - 15.11.2023
விண்ணப்ப்படிவத்துக்கு கீழ் வரும் இணைப்பை அழுத்தவும்
மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்