தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா கற்கைநெறிகள்




தொழில்நுட்பவியல் நிறுவகம் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் மூன்று (03) வருடகால முழுநேர தேசிய தொழில்நுட்பவியல் டிப்ளோமா கற்கை நெறிக்கு தெரிவு செய்வதற்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இக் கற்கை நெறியானது, தியகம, ஹோமாகமவில் அமைந்துள்ள தொழில்நுட்பவியல் நிறுவகம் மொறட்டுவைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடாத்தப்படும்.

1. பொதுவானவை

தேசிய தொழில்நுட்பவியல் டிப்ளோமா கற்கை நெறியானது இரண்டு வருட முழுநேர கற்றலையும், ஒரு வருட தொழிற் பயிற்சியையும் உள்ளடக்கியது. இதன் கற்கைமொழி ஆங்கிலம் ஆகும்.


கற்கை நெறிகள் பின்வரும் கற்கைத் துறைகளில் வழங்கப்படுகின்றது.

கடல்சார் கற்கைநெறிகள்
  1. கடல்சார் பொறியியல் தொழில்நுட்பம்
  2. கப்பற்துறை கல்வியும் தொழில்நுட்பமும்

ஏனைய கற்கைநெறிகள்
  1. இரசாயன பொறியியல் தொழில்நுட்பம்
  2. குடிசார் பொறியியல் தொழில்நுட்பம்
  3. மின்சார பொறியியல் தொழில்நுட்பம்
  4. இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் தொழில்நுட்பம்
  5. தகவல் தொழினுட்பம்
  6. இயந்திரவியல் பொறியியல் தொழில்நுட்பம்
  7. பல்பகுதிய தொழில்நுட்பம்
  8. புடவை மற்றும் ஆடைத் தொழில்நுட்பம்


மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்புகளில்





கருத்துரையிடுக

0 கருத்துகள்