ஜனாதிபதி தேர்தல் 2024- தபால் மூல வாக்களிப்பு தினங்கள்



2024 ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு தினங்கள் தொர்பான தகவல் வௌியிடப்பட்டுள்ளன.

அஞ்சல் வாக்காளர் இடாப்புக்கள் 2024.08.14 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டதுடன் அஞ்சல் வாக்குச் சீட்டுக்களின் விநியோகமும் அஞ்சலுக்கு ஒப்படைத்தலும் 2024.08.26 ஆம் திகதி மேற்கொள்ளப்படும்.

அதன்படி, அரச நிறுவனங்களிலும் படைகளிலும் அஞ்சல் வாக்காளர்களின் அஞ்சல் வாக்கு அடையாளமிடல் 2024.09.05, 06 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் அலுவலகங்கள், பொலிஸ் ஆகிய நிறுவனங்களின் அஞ்சல் வாக்காளர்களின் அஞ்சல் வாக்குகள், 2024.09.04 ஆம் திகதி அடையாளமிடப்படும்.

இத்தினங்களில் அஞ்சல் வாக்கு அடையாளமிட முடியாமல்போகின்ற அஞ்சல் வாக்காளர்களுக்கு 2024.09.11, 12 ஆகிய தினங்களில் தாம் பணிபுரிகின்ற இடம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களில் அஞ்சல் வாக்கு அடையாளமிடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

2024 சனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளை 2024.09.02 ஆம் திகதி அஞ்சலுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமான 2024.09.08 ஆம் திகதி அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், உத்தியோகபூர்வமான

வாக்காளர் அட்டைகளின் விநியோகம் 2024.09.14 ஆம் திகதி முடிவடையும். 2024.09.14 ஆம் திகதிக்குப் பின்னர் உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு 2024 தேருநர் இடாப்பில் பதிவுசெய்யப்பட்ட முகவரிக்கு உரிய அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று தனது ஆளடையாளத்தை வெளிப்படுத்திய பின்னர் உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பூரண தகவல்களுக்கு பின்னவரும் இணைப்பை அழுத்தவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்