விசேட கல்வி டிப்ளோமா கற்கை நெறி



தேசிய கல்வி நிறுவகத்தின், உட்படுத்தற் கல்வித்துறையினால் நடத்தப்படும் விசேட கல்வி டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.

கற்கைநெறியின் இயல்பு :

இது, பார்வைக் குறைபாடு, கேட்டல் குறைபாடு, உடல்சார்ந்த குறைபாடு, மந்தநிலை, ஒட்டிசம் நிலை, வேறு கற்றல் குறைபாடுகளால் ஏற்படுகின்ற கற்றல் பிரச்சினைகள் மற்றும் விசேட கல்வித் தேவைகளை எதிர்நோக்கும் மாணவர்களை இனங்கண்டு, அவர்களை விருத்தி செய்வதற்குத் தேவையான அடிப்படைத் தேர்ச்சிகளை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தும் பகுதி நேரக் கற்கைநெறியாகும். விரிவுரைகள் நிகழ் நிலையிலும், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட விசேட பாடசாலைகளில் செய்முறை அமர்வுகள் நேரடியாக நடைபெறும். உயர் கல்வி அமைச்சினால் பாடநெறி தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தராதர நியமங்களின் அடிப்படையில் (SLQF level 3 - Sri Lanka Qualifications Framework) இக் கற்கைநெறி தயாரிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவு 15.10.2024

மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பம் பின்வரும் இணைப்பில் உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்