கலைமாணி (வௌிவாரி)கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டோர்



யாழ்ப்பாண பல்கலைக்கழக, திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையமானது கலைமாணி (வௌிவாரி)கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டோர் பெயர் பட்டியல் மற்றும் அறிவுறுத்தல்களை வௌியிட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கீழ் உள்ள இணைப்பில் காணப்படும் ஆவணங்களை பூர்த்தி செய்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். கற்கைநெறிக்கு பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தையும், புகைப்படம் உறுதிப்படுத்தும் படிவத்தினையும் பூர்த்தி செய்து மக்கள் வங்கியில் பணம் செலுத்தியமைக்கான உறுதிச்சீட்டையும் சம்ர்ப்பித்து தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேர ஒழுங்கின் பிரகாரம் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

பாடத் தெரிவு தொடர்பாக வழிகாட்டற் கருத்தரங்கு ஒன்றினை பதிவு நடவடிக்கைகளின் பின்னர் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வழிகாட்டற் கருத்தரங்கில் பங்குபற்றிய பின்னர் பாடத் தெரிவினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்

பதிவு செய்யும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
  1. பூரணப்படுத்திய விண்ணப்பப் படிவம்
  2. புகைப்படம் உறுதிப்படுத்தும் படிவம்
  3. மக்கள் வங்கியில் பணம் செலுத்தியமைக்கான உறுதிச்சீட்டு (மூலப்பிரதி)
  4. கல்வித்தகைமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ் (க.பொ.த சாதாரண மற்றும் க.பொ.த உயர்தர பெறுபேற்று சான்றிதழ்களின் மூலப்பிரதியும், புகைப்படப்பிரதியும்)
  5. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் (மூலப்பிரதியும், புகைப்படப்பிரதியும்)
  6. திருமணச் சான்றிதழ் (பெண்கள்) (மூலப்பிரதியும், புகைப்படப்பிரதியும்)
  7. தேசிய அடையாள அட்டை (மூலப்பிரதியும், புகைப்படப்பிரதியும்)
  8. தொழில் புரிவோராயின் தற்போது வகிக்கும் பதவியை உறுதிப்படுத்தும் சான்றிதழ்
மேலதிக விபரங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பட்டியல் பின்வரும் இணைப்பில்







கருத்துரையிடுக

0 கருத்துகள்