தரம் 5 மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள் செப்ரம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்படுகின்றது.

 

இலங்கை பரீட்சைத் திணைக்களமானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடரபில் விசேட ஊடக அறிவித்தல் ஒன்றினை வௌியிட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் , தரம் 5 மாணவர்களுக்கான அனைத்து தனியார் வகுப்புகளும் தடை செய்யப்படுவதாக மேற்படி ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15.09.2024 ஞாயிற்றுக் கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்படும் 2024 ஆம் ஆண்டிற்குரிய பரீட்சை செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி 2024 இல் 2849 பரீட்சை நிலையங்களில் நாடளாவிய ரீதியில் நடாத்துவதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்படும் பரீட்சை 2024.09.11 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் பரீட்சை முழுமையாக நிறைவடையும் வரை பின்வரும் விடயங்கள் தடை செய்யப்படுகின்றன.

  • பரீட்சார்த்திகளுக்காக தனியார் வகுப்புக்களை ஏற்பாடு செய்தலும் நடாத்துதலும்.
  • பாடம் தொடர்பான ஆலோசனைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்துதல்.
  • மேற்படி பரீட்சையின் ஊக வினாக்களடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிடலும், அவற்றை விநியோகித்தலும்.
  • பரீட்சை வினாப்பத்திரத்திலுள்ள வினாக்களை தருவதாகவோ அல்லது அதற்குச் சமனான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல்/ அச்சு ஊடகங்கள் மூலமோ, சமூக வலைத்தளங்கள் மூலமோ பிரசுரித்தல், அவற்றை வைத்திருத்தல்.
மேற்படி கட்டளை மீறப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக பின்வரும் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்ய முடியும்

பொலிஸ் நிலையம் 
- 0112 42 11 11 

பொலிஸ் அவசர அழைப்பு இல 
- 119

இலங்கை பரீட்சைத் திணைக்கள நேரடி அழைப்பு இல 
- 1911

பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேற்றுக் கிளை
- 0112 - 784 208/ 0112 784 537

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஊடக அறிவிப்பு பின்வரும் இணைப்பில் உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்