பிள்ளைகளுடன் அவதானமாக இருப்போம்



இன்றைய இளைய தலைமுறையினரிடையே பரவலாக காணப்படும் இள வயது காதல்களும், அவற்றின் பின் விளைவுகளும் பாரதூரமாக அமைகின்றன. பல்வேறு வழிகளில் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டாலும் இள வயதினர் குறித்த பிரச்சினைக்குள் அகப்பட்டு வௌிவர முடியாது மென்மேலும் சிக்கலுக்குள் அகப்பட்டுக் கொண்டும், இன்னும் சிலர் பாரதூரமான முடிவுகளுக்கும் செல்கின்றனர். எனவே பெற்றொர் தம் பிள்ளைகளின் விடயத்தில் நெருக்கமாக இருப்பதுடன் அவர்களின் நடவடிக்கைள் தொடர்பில் அவதானமாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய தினமின நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட செய்தியின் மொழிபெயர்ப்பினை  படிப்பினைக்கான கீழே தருகின்றோம்.


பாடசாலை மாணவியான தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை வட்ஸப் குழுமங்களில் பகிரப்போவதாக அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்டாயப்படுத்தி 34 500 ரூபாவினை பெற்றுக் கொண்டு, மேலும் 30 000 தருமாறு அச்சுறுத்திய காதலினை கைது யெ்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மேற்படி மாணவி குறித்த நபருடன் வருட ஆரடம்பத்தில் இருந்து காதல் தொடர்பில் இருந்துள்ளார். குறித்த நபர் திடீரென  தொடர்பை நிறுத்தியுள்ளார். 


அதன் பின்னர் குறித்த மாணவியை தொடர்பு கொண்ட அந்த நபர் பணம் கொடுக்குமாறும் , இல்லாவிடின் அப்புகைப்படங்களை வட்சப் குழுமங்களில் பகிரப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.  அதற்கு பயந்ா அம்மாணவி 4000,3500,5000 என பல்வேறு சந்தர்ப்பங்களில் பணத்தினை வைப்பிலிட்டுள்ளார். 

எனினிம் இரண்டு தினங்களுக்கு பின்னர் மீளவும் தொடர்பு கொண்ட குறித்த நபர் வௌ்ளிக்கிழமைக்கு முன்னர் 30 000 தருமாறு அச்சுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து குறித்த மாணவி பெற்றோருக்கு அறியப்படுத்த, பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்