பாடசாலை நீர் தொட்டியில் எலி - மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி



தனமல்வில கல்வி வலய , ஆரம்பப் பிரிவு பாடசாலை ஒன்றில் , மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக , தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் கடந்த 11.09.2024 ஆம் திகதி பாடசாலையில் நீரை அருந்தியதன் பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டு குமட்டல் மற்றும் வாந்தி காரணமாக 21 மாணவர்களும் ஒரு ஆசிரியையும் இவ்வாறு வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் அறிக்கையின் படி ,21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஒருவருக்கு மாத்திரம் வாந்தி வௌியேறிதாகவும் ஏனைய மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் காணப்படவில்லை எனவும், குறித்த தினமே அனைவரும் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் எனவும் குறிப்பிடப்பட்டது,

குறித்த பிரதேச பொலிஸ் அதிகாரிகள் பாடசாலைக்கு சென்று பாடசாலையை பரீட்சித்த பொழுது, பாடசாலையின் நீர் தாங்கியில் இறந்த எலி ஒன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

உடனிடியாக பெற்றோர்கள் உதவியுடன் நீர்த்தாங்கு சுத்தம் செய்யப்பட்டு பிராணிகள் உள் நுழையாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன




நன்றி - தினமின 13.09.2024



கருத்துரையிடுக

0 கருத்துகள்