இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமானது கொரிய மொழிப் பரீட்சை பெறுபேறுகளை வௌியிட்டுள்ளது.
கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைதலானது, கொரிய நாட்டில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்த மாட்டாது. இது உங்களது கொரிய வேலைவாய்ப்பு விண்ணப்பத்தினை கொரிய இணையத்தளத்தில் பதிவு செய்வதற்கான தகைமையை பெற்றுக் கொண்டதாக கருதப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
அதாவது கொரிய மொழிப்பரீட்சையில் சித்தியடைவதால் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட மாட்டாது. வேலைவாய்ப்பு விண்ணப்பத்தினை பதிவு செய்தவற்கான தகைமையாக அது கருதப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் தமது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
பெறுபேறுகளை பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்தவும்
0 கருத்துகள்