அபிவிருத்து உத்தியோகத்தர்களை ஆசிரிய சேவைக்கு உள்ளீர்த்தல் வழக்கு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது



அபிவிருத்து உத்தியோகத்தர்கனை ஆசிரிய சேவைக்கு உள்ளீர்த்தல் வழக்கு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை தொடர்பில் இன்றைய தினமின நாளிதழ் (13.09.2024) செய்தி வௌியிட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தலின் படி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரிய சேவைக்கு உள்ளீர்த்தல் தொடர்பிலான வழக்கானது நேற்றைய தினம் ( 12.09.2024 வியாழக்கிழமை) இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இணக்கப்பாடு தொடர்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ளதன் பிரகாரம், தற்போது நீதிமன்றுக்கு  சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்தின் படி எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டு நிபந்தனைகள் பிரகாரம் செயற்படல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்படுத்தப்படும் தன்மைக்கு ஏற்ப , தேவையேற்படின், உரிய தரப்பினருக்கு மோசம் ஒன்றின் மூலம் வழக்கை மீள கொண்டு செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் இன்றைய தினமின (13.09.2024) நாளிதழில் வௌியிடப்பட்ட செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்