தேசிய குறிக்கோள்கள், அடிப்படைத் தேர்ச்சிகள் மற்றும் கல்விக்கொள்கைகளை இலக்காகக் கொண்டு பெற்றாரின் அபிலாஷைகள் மற்றும் சமூக வேண்டல்கள் என்பனவற்றை அடைந்து கொள்ளும் வகையில் பாடசாலையின் கலைத்திட்டத்தை முகாமைத்தவம் செய்தல் வேண்டும்.
மாணவர் தேர்ச்சி அடைவு மற்றும் அவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக் கொணர்வதற்காக நடவடிக்கை எடுத்தல் என்பது கலைத்திட்ட முகாமைத்துவத்தினூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.
கலைத்திட்டமானது பின்வருமாறு வகைப்படுத்தப்படும்
1. முறையான கலைத்திட்டம்
2. முறையில் கலைத்திட்டம்
1) இணைக் கலைத்திட்டம்
2) மறைக் கலைத்திட்டம்
இணைக்கலைத்திட்ட நடவடிக்கைகள்
இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் எனப்படுவது பாடசாலையொன்றில் மேற்பார்வைக்குக் கீழ்ப்பட்டதாக சாதாரண வகுப்பறைக்கு வெளியே முன்னெடுக்கப்படும் முறையான கலைத்திட்டத்தின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு உதவக் கூடிய கற்றல் அனுபவத்தை வழங்கும் வேலைத்திட்டமொன்றாகும்.
கன்னங்கர குழு அறிக்கை - 1946
இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளின் தேவை
வகுப்பறையில் முன்னெடுக்கப்படும் முறைசார்ந்த கலைத்திட்டத்தினுள் அறிவியல்சார் மற்றும் கோட்பாட்டு ரீதியிலான அறிவை மாத்திரம் பெற்றுக் கொள்ளும் பாரம்பரியத்திற்கு மாறாக மனப்பாங்கு ரீதியாக மாணவர்களை அபிவிருத்தி செய்து அறிவு மற்றும் தினறன்களில் பரிபூரணமான கூட்டு ஆளுமைகளைக் கொண்ட பிள்ளையொன்றை தேசத்திற்கு ஒப்படைப்பதற்கு இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளை பாடசாலையில் நடைமுறைப்படுத்தல் கட்டாயத் தேவையாகும்.
பாடசாலையில் நடைமுறைப்படுத்தக்கூடிய இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகளுக்குரிய துறைகள்
உடல் விருத்திக்கான செயற்பாடுகள்
- விளையாட்டு(உள்ளக/திறந்தவெளி)
- தேகப்பயிற்சி அணிவகுப்பு
- உடற்பயிற்சி
- யோகா
சிந்தனை விருத்தி தொடர்பான செயற்பாடுகள்
- பாட கழகங்கள்- கணிதம்- இலக்கியம், ஆங்கிலம் போன்ற பாட கழகங்கள்
- விவேகமேடை / விவேக கலந்துரையாடல் / விவாதம்
- புத்தாக்கக் கழகம்
- வானியல் கழகம்
- கட்டுரைப் போட்டி
- கவிதை ஆக்கம்
- பாடசாலை சஞ்சிகைத் தயாரித்தல்
- கள/கல்விச் சுற்றுலா
- சிந்தனையைத் தூண்டும் விளையாட்டுகள்.
ஆளுமை விருத்திக்கான செயற்பாடுகள்
- தலைமைத்துவ விருத்தி வேலைத்திட்டங்கள்
- சவால்கள் நிறைந்த ஆட்டம் / விளையாட்டு
- சாரணீயம் / மாணவர் படையணி
அழகியல் செயற்பாடுகள்
- சித்திரப் போட்டிகளும் கண்காட்சியும்
- நாடகங்கள்/ நடனம்/ சங்கீத போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள்
- பாடசாலை வாத்தியக் குழு
- சிற்பக் கலையும் செதுக்கு வேலையும்
- அலங்கார வேலைகள்
சமூக அபிவிருத்திக்கான செயற்பாடுகள்.
- சிரமதான வேலைத்திட்டங்கள்
- செஞ்சிலுவை/முதலுதவி/சுகாதார மேம்பாட்டுக் கழகம் போன்ற, வேலைத்திட்டங்கள்
- அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டங்கள்
- சமூக நலனோம்பல் சேவைகள்.
- போதைப் பொருட்கள் / புகைத்தல் தடுப்பு வேலைத்திட்டங்கள்
- சமூக நோய் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்
- சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள்.
மாணவர் ஆற்றல் விருத்திக்கான செயற்பாடுகள்
- தொடர்பாடல் ஆற்றல்களை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள்
- விவசாய தொழில்நுட்ப நடவடிக்கைகள் (தோட்ட அலங்காரம்/வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை)
- ஆடைகளைத் தைத்தல்
- இலத்திரனியல்/ வீட்டு மின்சார உதிரிப்பாக திருத்த வேலை
- உணவுத் தயாரித்தல்
- மட்பாண்டக் கைத்தொழில்
- தச்சுத் தொழில்
- தகவல் தொழில்நுட்பச் செயற்பாடுகள்
- விளையாட்டுப் பொருட்களை ஆக்குதல்
- அழகுக் கலைச் செயற்பாடுகள்
- தேர்ச்சி முகாம்கள்
கலாசார, நன்னடத்தை மற்றும் விழுமிய ஆற்றல்களை விருத்தி செய்வதற்கான செயற்பாடுகள்.
- கலாசார விழாக்களைக் கொண்டாடுதல்/பாரம்பரியங்களை நிறைவேற்றுதல்,
- பல்வேறு கலாசாரங்கள், சமய முக்கியத்தவம் வாய்ந்த இடங்களைத் தரிசித்தல்
- கலை விழாக்கள் / கலாசார இசை நிகழ்ச்சிகளை நடாத்துதல்
- பல்வேறு கலாசாரங்கள், சமய குணாதிசயங்களை ஆய்வு செய்தல்/கலந்துரையாடல்
- தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தக் கூடிய வேலைத்திட்டங்கள்
- ஒழுக்க நடவடிக்கைகள (சீல) மற்றும் தியான வேலைத்திட்டங்கள், தானம்,பிரித் பாராயனம்.
பிரஜைகள் பயிற்சிக்கான செயற்பாடுகள்.
- மாணவர் பாராளுமன்றம், கூட்டுறவுக் கழகம் / கூட்டுறவு வங்கி
- பிரஜைகள் செயற்பாடுகளுக்குரிய இடங்களின் ஆய்வு
- மாணவர் முகாம்கள்
- கணிப்பீடும் ஆய்வும்.
0 கருத்துகள்