குருநாகல் பிரதேச பாடசாலையில் உயர்தர மாணவ குழுக்கள் இரண்டுக்கிடையில் நடைபெற்ற மோதலில் வெட்டுக் காயங்களுடன் நான்கு மாணவர்கள் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினமின (31.10.2024) செய்தி வௌியிட்டுள்ளது.
கடந்த 29 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர், பாடசாலைக்கு முன்னால் கலை மற்றும் வர்த்தக பிரிவு மாணவர்களுக்கு இடையில் மேற்படி மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், இம்மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் பேபர் கட்டர் இனால் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் தலை, முகம், கை, கால் மற்றும் வயிற்றுப் பிரதேசங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சிங்கள நாளிதழில் வௌியிடப்பட்டுள்ள தகவல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்