பாடசாலை சம்பவத்திரட்டுப் புத்தகம்


பாடசாலை சம்பவத்திரட்டுப் புத்தகமானது பாடசாலையின் முக்கிய ஆவணமாகும். அது தொடர்பில் விசேட கவனம் செலுத்துதல் அதிபர்களின் பொறுப்பாகும்.

  • பாடசாலை சம்பவத் திரட்டுப் புத்தகமானது, பாடசாலையின் வரலாறு மற்றும் கடமைகள் மேற்கொள்ளப்படுகின்றமை, பாடசாலையில் இடம்பெற்ற விசேட செயற்பாடுகள் தொடர்பான முக்கியத் தகவல்கள் என்பன அடங்கிய ஆவணமாதலால்,  பாடசாலையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். 
  • சம்பவத் திரட்டுப் புத்தகத்தை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • சம்பவத் திரட்டுப் புத்தகத்தை அதிபருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும். அதில் தகவல்களைக் குறிப்பிடுதல் அதிபரால் மேற்கொள்ளப்படுவதோடு அதிபர் பாடசாலையில் இல்லாத போது அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • அதிபர் பாடசாலையை விட்டு வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களில் சம்பவத்திரட்டுக் குறிப்பை இடுவதனூடாக பணிப்பகிர்வு செய்யப்பட வேண்டியதோடு, கடமைகளைப் பொறுப்பேற்ற நபரினால் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக குறிப்பினை இடுதல் வேண்டும்.
  • சம்பவத் திரட்டுக் குறிப்பினை எழுதும்போது ஆரம்பத்திலேயே குறிப்பு இடப்படும் திகதியை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டியதோடு இறுதியில் குறிப்பினை இட்ட நபரின் ஒப்பம்,பெயர் மற்றும் பதவியை குறிப்பிட வேண்டும்.
  • ஒரு சம்பவத் திரட்டுக் குறிப்பை இட்ட பின்னர் அடுத்த குறிப்பினை இடுவதற்காக விடப்படும் இடைவெளியானது மேலதிக குறிப்பினை இடுவதற்கு முடியாத வகையில் இருத்தல் வேண்டும்.
  • சம்பவத் திரட்டுக் குறிப்பொன்றை மாற்றம் செய்வதோ அல்லது வெட்டிவிடுவதோ அல்லது அழிப்பதோ தவிர்க்கப்படல் வேண்டும். 
  • குறிப்பு ஒன்றை இடும்போது தவறு ஒன்று ஏற்படுமாயின், அதற்கு அடுத்தாக குறிப்பொன்றை இட்டு அதனை சரி செய்தல் வேண்டும்.
  • ஒவ்வொரு பக்கமும் இலக்கமிடப்பட்டிருப்பதோடு ஒரு பக்கத்தை அகற்றி விடுவதோ புதிய பக்கமொன்றை புகுத்துவதோ செய்யக் கூடாது.
  • ஒவ்வொரு சம்பவத் திரட்டுக் குறிப்பும் தொடரொழுங்கில் இலக்கமிடப்பட்டித்தல் பொருத்தமாகும்.

சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் குறிப்பினை இடுவதற்கு அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர்கள்.

  • நிரல் கல்வி அமைச்சு, மாகாண, வலய மற்றும் கோட்டக் கல்விப் பணிமனைகளில் கடமைகளின் நிமித்தம் சமுகந் தரும் பதவிநிலை உத்தியோகத்தர்கள்.
  • பாடசாலைக்கு கடமை நிமித்தம் சமுகமளிக்கும் சுகாதார வைத்திய அதிகாரி, கணக்காய்வு மற்றும் ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் மற்றும் அரச சமாதான நிலை உத்தியோகத்தர்கள்.

சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் குறிப்பினை இடும் சந்தர்ப்பங்கள்.

  • பாடசாலையின் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்திற்குரிய விசேட சந்தர்ப்பங்கள்.

  • கடமை நிமித்தம் அதிபர் வெளியில் செல்லுதலும் கடமை நிறைவேற்றுதலும்.
  • கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்கள் பாடசாலைக்கு நியமிக்கப்படுதல்/இடமாற்றம்/பதவி உயர்வு/ ஓய்வு பெறுதல்.
  • பாடசாலையில் விசேட பிரச்சினைகள் உருவாகும் பட்சத்தில் (திருட்டு ஒன்று இடம்பெற்றுள்ள போது, ஒழுக்காற்று பிரச்சினையொன்று உருவாகும் பட்சத்தில், திடீர் மரணமொன்று ஏற்படும் பட்சத்தில்,எதிர்பாராத சுற்றாடல் பிரச்சினையொன்று  )
  • கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்களுக்கு வீட்டிலிருந்து கடமை நிலையத்திற்கு சமுகமளித்தல், திரும்பிச் செல்லுதல், கடமை நிமித்தம் வெளியில் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் அல்லது கடமை நிலையத்தில் வைத்து திடீர் விபத்து ஏற்படுதல்.
  • மாணவரோடு தொடர்புடைய விசேட நிகழ்வுகள்.
  • பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளும் விழாக்களும்.
  • பாடசாலையின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்கள் வெளிநாட்டு லீவு பெற்றுக் கொள்ளுதலும் மீண்டும் சமுகமளித்தலும்.
  • பாடசாலையின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்கள் முழு நேர கற்றல் விடுகையைப் பெற்றுக் கொள்ளுதலும் மீண்டும் சமுகமளித்தலும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்