பாடசாலை கழிவறை சுத்தம் செய்த மாணவிகள் வைத்தியசாலையில்


 

பலாங்கொடை பிரதேச பாடசாலை ஒன்றில் மாணவிகள் சிலர் ஒவ்வாமை காரணமாக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக இன்றைய தினகரன் (26.10.2024) செய்தி வௌியிட்டுள்ளது.

நேற்று வௌ்ளிக்கிழமை பிற்பகல் 22 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவிகள் இரசாயண பொருட்கள் சிலவற்றை பயன்படுத்தி கழிவறைகளை சுத்தம் செய்துள்ளனர். அதன் பின்னர் திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.

சுகயீனமடைந்த மாணவிகள் பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

பத்திரிகை செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது





கருத்துரையிடுக

0 கருத்துகள்